என் மலர்

  நீங்கள் தேடியது "parents scold"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலம் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

  கபிஸ்தலம்:

  கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் உமையாள்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் தினேஷ்குமார் குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரை பெற்றோர் ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லூரி சென்ற மகள் மாயமாகி விட்டதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

  விருதுநகர்:

  விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).

  இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.

  இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.

  இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

  அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

  இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவிலில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய்யை அவரது பெற்றோர் நன்கு படிக்குமாறு கூறி வந்தனர். இதனால் சஞ்சய் அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

  நேற்று விடுமுறை தினம் என்பதால் சஞ்சய் வெளியே சென்று இருந்தார். அப்போது தனது நண்பர்களிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறினார். அவரை சக நண்பர்கள் சமாதானம் செய்தனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பக்கத்தில் உள்ள முந்திரி மரம் ஒன்றில் சஞ்சய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

  இதுகுறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சஞ்சய் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் ஏராளமானோர் இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். சஞ்சய்யின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 

  சஞ்சய் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரிக்கலாம்பாக்கம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  புதுச்சேரி:

  கரிக்கலாம்பாக்கம் அருகே பெருங்களூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சிவா (வயது 15). இவன் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

  சம்பவத்தன்று சிவா வீட்டில் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை ரோட்டில் வீசினான். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு சைக்கிளில் வீட்டில் இருந்து சென்ற சிவா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் இல்லை.

  இதையடுத்து சிவா மாயமானது குறித்து அவனது பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிவாவை தேடி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி மஞ்சுளா (வயது 40). இவர்களது மகன் முத்துராஜ் (வயது 15).

  இவன் கலிங்கப்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். முத்துராஜ் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த காலாண்டு தேர்வையும் சரியாக எழுதவில்லையாம். தேர்விலும் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.

  இந்நிலையில் 4-ந் தேதி பள்ளிக்கு செல்கிறேன் என கூறி சென்றவன் பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் முத்துராஜை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்போனில் பாட்டு கேட்பதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  வள்ளியூர்:

  ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன். விவசாயி. இவரது மகள் உமாபாரதி (வயது 19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருக்கும் போது செல்போனில் பாட்டு கேட்டபடி இருந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யாமல் பாட்டு கேட்கிறீயே என கண்டித்துள்ளனர். 

  இதில் மனம் உடைந்த அவர் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ×