என் மலர்
நீங்கள் தேடியது "school student suicide"
- மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.
- மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்த மினி டிப்பர் லாரி டிரைவருக்கு 18 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருந்து வந்தனர்.
மகன் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.
மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் தொடர்ந்து மாணவிக்கு போன் செய்து காதலிப்பதாக டார்ச்சர் செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்துகொண்டு மாணவி வீட்டில் கூறாமல் இருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து காதலிக்கும்படி அந்த வாலிபர் மாணவியிடம் தொந்தரவு செய்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
அப்போது மாணவியின் அண்ணன், சேலத்தை சேர்ந்த மணிக்கு போன் செய்து தட்டிக் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி உங்கள் ஊரில் வந்தே உன்னை வெட்டுவேன். என்னை ஒன்னும் செய்யமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவிக்கும்படி கேட்டுள்ளனர். தன் மீது சந்தேகப்படுவதாக கருதிய மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போனில் பேசிய சேலத்தை சேர்ந்த மணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் செல்போன் விபரங்கள் மூலம் அந்த வாலிபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் முனீசுவரன் (வயது 14). இவர் மேல சின்னயாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் முனீசுவரன் பள்ளிக்குச் செல்லவில்லை.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். அப்போது ஸ்டைலாக முடிவெட்டியிருந்தார். இதனை நண்பர்கள் கேலி செய்தனர்.
ஸ்டைலாக முடிவெட்டியதால் பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற முனீசுவரனுக்கு சக மாணவர்களின் கேலி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
மாலையில் வீடு திரும்பிய பின்னரும், சோகமாகவே இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. தனியாக இருந்த முனீசுவரன், உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய முனீசுவரனை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றதும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முனீசுவரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசில், அய்யனார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு பெரியசாமி (வயது 15), கருப்பசாமி (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கருப்பசாமி அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கருப்பசாமி புத்தகப் பைகளை வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கருப்பசாமி தனது தாயார் இந்திராவின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து மாணவர் கருப்பசாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி.டி.சி. காலனியை சேர்ந்தவர் முகமது சபீக். இவரது மகள் அஸ்மத் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அஸ்மத் வீட்டில் இருந்த தனது பாட்டியிடம் அறையில் படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பாட்டி அறைக்கு சென்று பார்த்தார். அறையில் அஸ்மத் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்மத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மாணவி படிப்பில் நாட்டம் இல்லாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் உமையாள்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் தினேஷ்குமார் குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரை பெற்றோர் ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த சாலவான் குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (வயது14). நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் தினசரி மது அருந்தி விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதை தட்டிக்கேட்ட மனைவி அர்ச்சனாவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் மன முடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மகள் வள்ளி (வயது17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் வள்ளி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வயிற்று வலியால் வள்ளி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி மாலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதை ஏற்று மாணவியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #Tamilnews
திருப்பூர் 15.வேலம் பாளையம் சோலி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். பனியன் தொழிலாளி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் சிகை அலங்காரத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். தலை முடியை ஸ்டைலாக அடிக்கடி மாற்றி வந்தார். கோடை விடுமுறையையொட்டி தற்போது புதிய ஸ்டைலில் முடி வெட்டி இருந்தார். இதை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.
வரும் 1-ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ளது. வித்தியாசமாக முடிவெட்டி இருப்பதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். முடியை அழகாக வெட்டிக்கொள் என்று தந்தை கூறி வந்தார். ஆனால் மகன் மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மகனை கட்டாயமாக சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடியை பள்ளிக்கு செல்லும் அளவுக்கு வெட்டுமாறு கூறினார். கடைக்காரரும் அப்படியே வெட்டினார். தனக்கு பிடித்த ஸ்டைலில் வைத்திருந்த முடி போய்விட்டதே என்று மாணவர் நவீன்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews






