என் மலர்

  நீங்கள் தேடியது "Pollachi suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கோவை:

  பொள்ளாச்சி கோட்டூர் அருகே அவால் சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  அதன் பின்னர் சம்பத் குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தாரணி பிரிந்தார்.

  இதனையடுத்து தாரணிக்கு அவரது உறவினர் ஒருவர் அவால் சின்னம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். அங்கு தாரணி தனியாக வசித்து வந்தார்.

  இந்தநிலையில் தாரணிக்கு வீட்டின் அருகே வசித்து வந்த சோமசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது உறவினர் கண்டித்தார்.

  நேற்று மதியம் உறவினர் தாரணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தாரணியின் செல்போனை எடுத்து பார்த்தார். அதில் தாரணி சோமசுந்தரத்தக்கு அனுப்பிய மெசேஜ் இருந்தது. இதில் கால் மீ ப்ளீஸ், நீ கால் பன்னலனா நாளைக்கு மார்னிங் நான் இருக்க மாட்டன் ஐயாம் இன் டெத் என்று இருந்தது.

  உடனடியாக உறவினர் செல்போனை எடுத்துக்கொண்டு சோமசுந்தரம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் தாரணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

  அப்போது வீட்டில் உள்ள அறையில் தாரணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

  இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் தாரணி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  பொள்ளாச்சி தர்மராஜா காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் தமிழ்மணி (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

  சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். தமிழ்மணியை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவவு செய்து தமிழ்மணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் படிப்பில் நாட்டம் இல்லாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  பொள்ளாச்சி:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி.டி.சி. காலனியை சேர்ந்தவர் முகமது சபீக். இவரது மகள் அஸ்மத் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று மாலை இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அஸ்மத் வீட்டில் இருந்த தனது பாட்டியிடம் அறையில் படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

  நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பாட்டி அறைக்கு சென்று பார்த்தார். அறையில் அஸ்மத் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்மத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மாணவி படிப்பில் நாட்டம் இல்லாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

  ×