என் மலர்

    செய்திகள்

    பொள்ளாச்சியில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    பொள்ளாச்சியில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் படிப்பில் நாட்டம் இல்லாததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி.டி.சி. காலனியை சேர்ந்தவர் முகமது சபீக். இவரது மகள் அஸ்மத் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அஸ்மத் வீட்டில் இருந்த தனது பாட்டியிடம் அறையில் படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பாட்டி அறைக்கு சென்று பார்த்தார். அறையில் அஸ்மத் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்மத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் மாணவி படிப்பில் நாட்டம் இல்லாததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    Next Story
    ×