என் மலர்

    செய்திகள்

    வாலிபருடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்
    X

    வாலிபருடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்லூரி சென்ற மகள் மாயமாகி விட்டதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகள் பெத்து மணி (வயது 20).

    இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்ணன். இவருடன் பெத்துமாரி அடிக்கடி பேசியுள்ளார்.

    இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கண்ணன் குடும்பத்தினர் மதுரைக்கு மாறி விட்டனர். அதன் பின்னர் பெத்துமாரி செல்போன் மூலம் கண்ணனிடம் பேசி வந்தாராம்.

    இந்த நிலையில் மாரிக்கனியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளனர். அவரது மனைவி மீனாட்சியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அப்போது தனியாக வீட்டில் இருந்த பெத்துமாரி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து பாண்டியன் நகர் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெத்துமாரியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×