search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competitions"

    • நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஆண்டு தோறும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் திருவிழா, சித்தர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    இந்தாண்டுக்கான சமத்துவ பொங்கலுக்கான விழா நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் சாந்தமரியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேற்று பல்லாங்குழி, கேரம்போர்டு, இறகுபந்து போட்டி, கைப்பந்து போட்டி, மெகந்தி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மாறுவேட போட்டி, ஓவியம் வரைதல் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நாளை கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் கல்லூரியில் உள்ள அனைத்து துறை மாணவ-மாணவிகள் புதுப்பானை யில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடுகின்றனர். இதையொட்டி கல்லூரி வளாகத்தில் வண்ணமிகு கோலங் களும், தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

    வேலூர்:

    முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    விளையாட்டு போட்டி

    கூட்டத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேசியதாவது;

    44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு களுக்காக மாநிலம், மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தாா்.

    அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    42 போட்டிகள் மாவட்ட அளவிலும், 8 போட்டிகள் மண்டல அளவிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இந்த 50 போட்டிகளுக்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.

    பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத்தின் அணி உருவாக்கப்படும்.

    மாவட்ட அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும். மாநில போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்ட அணிக்கும் தனியாக சீருடை, பயணச் செலவு, தங்குமிடம், உணவு ஆகியன வழங்கப்படும்.

    மாநிலப் போட்டிகளின் நிறைவு விழா முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும்.முதல் 3 இடங்கள் பெரும் மாவட்டங்களுக்கு முதல்அமைச்சா் கோப்பை வழங்கப்படும்.

    விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் நொய்லின்ஜான், கல்லூரி கல்வி இணை இயக்குநா் காவேரியம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
    • போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன. ஆண்-பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் என 50 வகையான போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், 12 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப் பநந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மேலும், 17 வயது முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, கையுந்துப்பந்து, மேசைப்பந்து போட்டிகளி லும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, செஸ் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும்.

    மாவட்ட அளவிலானப் போட்டிகளில் தனிநபர்

    பிரிவில் வெற்றிப்பெறு பவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 - எனவும், இரட்டையர் பிரிவிற்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கையிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தலாரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படும் விளையாட்டு வீரர் வீராங்க னைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்துகொள்ள இயலாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை - மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது. போட்டிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பந்தை வட்டத்திற்குள் வைத்தல், எறிபந்து விளையாட்டு முதலியவை நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடி வில் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்ப ட்டது.


    இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி சரவணன், மாவட்ட பிரதிநிதி டைட்டஸ் ஆதித்தன், முத்துக்கு மார், அவைத் தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார் பொருளாளர் லாசர் மற்றும் ரமேஷ், வைரவேல், கிளைச் செயலாளர் முருகராஜ், சதீஷ் செல்வராஜ் ஆதி மாவட்ட நெசவாளர் அணி சோம செல்வ பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமார், அஜய் மகேஷ் குமார் வார்டு செயலாளர்கள் தடிகாரன், விக்னேஷ், வீரமணி சுரேஷ், சரவணன் மற்றும் கார்த்தி, குட்டி, செல்வம், அன்சாரி, ஜான்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு யோசேப்பு, முருகன், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் முத்துச் செல்வி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.
    • இவ்விழாவில் குமராபாளையம் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி நிறுவனர் விஜயகுமார் தலைமையில் அப்பள்ளியின் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்விழாவில் குமராபாளையம் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி நிறுவனர் விஜயகுமார் தலைமையில் அப்பள்ளியின் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளிகள், தொண்டு நிறு வனங்கள் சார்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • 3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திற னாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர், கை கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
    • இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்–திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 52 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பலவிதமான விளை–யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி–யில் கலந்து கொண்ட மாண–வர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரி, புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், நாமகிரிப்–பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பா சிரியர்கள் அருள் ராஜா, சரவணன் மற்றும் இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா மற்றும் பகுதிநேர ஆயத்த மையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் பயிற்சி கோகுல் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் பயிலும் 210 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த விளையாட்டுப் போட்டி களில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் மாணவ- மாணவிகளுக்கு குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் போன்ற போட்டிகள் இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடிக்கும் மாணவ- மாணவிகள் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடை பெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    சென்னையில் நடைபெறும் போட்டி களில் வெற்றி பெறுபவ ர்களுக்கு 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சென்னையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் சிறப்பு பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி, ஜூடோ, சிலம்பம் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாலையோர மிதிவண்டி போட்டியில் பாடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 17 19 பிரிவில் முதலிடம் பெற்றனர். ஜூடோ போட்டியில் 14 வயது பிரிவில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், கொத்தவாசல் அரசு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    19 வயது பிரிவில் லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். சிலப்பம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கம்பு சண்டை போட்டியில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். போட்டியின் ஏற்பாடுகளை லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • 100 மீட்டர் ஓட்ட போட்டியில் நெல்லை மாவட்ட சுகாார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்று ஓடினார்.
    • நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய் கேர் திட்டத்தை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

    நெல்லை:

    தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் கொண் டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் இதற்கான விழா நடைபெற்று வருகிறது.

    இத்துறையின் பணியா ளர்களை ஊக்குவிக்கும் விதமாக பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பொது சுகாதாரம்- நோய் தடுப்பு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு ஓட்டப் பந்தம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

    100 மீட்டர் ஓட்ட போட்டியில் நெல்லை மாவட்ட சுகாார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்று ஓடினார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

    அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கொரோனா காலத்தில் பொது சுகாதாரத் துறையினர் மிக சிறப்பாக பணியாற்றினார்கள். நெல்லை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய் கேர் திட்டத்தை முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.இவை அனைத்தும் உங்களால் சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறும்போது, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை யொட்டி விழிப்புணர்வு ஜோதி பல்வேறு மாவட்டங் களுக்கு எடுத்து செல்லப்ப டுகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளது.

    விழிப்புணர்வு ஜோதி வருகிற 10-ந் தேதி தென்காசியில் இருந்து நெல்லை கொண்டு வரப்படுகிறது. அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    • 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் இயக்குனரின் உத்தரவின்படி வட்டார அளவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி டாக்டர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளை கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். இதில் 100, 200 மீட்டர் ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து போட்டிகள் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இறகு பந்து, சதுரங்கம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலம், பாட்டு, நடன போட்டிகள் புயல் நிவாரண கூட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 125 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள்

    பெரம்பலூர்

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அந்த துறையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோ-கோ, கிரிக்கெட், கபடி, பூப்பந்து. எறிப்பந்து, ஹேண்ட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கோலப்போட்டி, சிறு சிறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அந்தந்த வட்டார மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பரிசளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது."

    ×