என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
- நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் ஆண்டு தோறும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் திருவிழா, சித்தர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
- இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
இந்தாண்டுக்கான சமத்துவ பொங்கலுக்கான விழா நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் சாந்தமரியா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேற்று பல்லாங்குழி, கேரம்போர்டு, இறகுபந்து போட்டி, கைப்பந்து போட்டி, மெகந்தி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து மாறுவேட போட்டி, ஓவியம் வரைதல் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று 2-வது நாளாக பாரம்பரிய போட்டிகளான கபடி, கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நாளை கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் கல்லூரியில் உள்ள அனைத்து துறை மாணவ-மாணவிகள் புதுப்பானை யில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடுகின்றனர். இதையொட்டி கல்லூரி வளாகத்தில் வண்ணமிகு கோலங் களும், தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.