search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggled"

    கேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர்- கேரளா எல்லையான வழிக்கடவு சோதனைச்சாவடியில் கேரள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிஷ் தலைமையில் சிஜூமோகன், யூசுப் உள்பட போலீசார் வாகனங்களை முழு தணிக்கை செய்த பின்னரே கேரளாவுக்கு அனுமதித்தனர்.

    அப்போது மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சென்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ்சை நிறுத்தி மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி அமர்ந்து இருந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் பையின் மேற்புறம் காய்கறிகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பைகளை முழுமையாக சோதித்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகள் 4 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அந்த பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நவுசாத் (வயது 35), ரபீக் அகமது (41) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து நவுசாத், ரபீக் அகமது ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ஓசூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து ஸ்கூட்டரில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - மத்திகிரி கூட்டு ரோடு அருகே, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில், போலீசார் மடக்கினார்கள். 

    பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்து, வண்டியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரீதம் சவுத்ரி(22) என்ற அந்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 249 மது பாக்கெட்டுகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
    மேற்கு வங்க மாநிலத்தில் ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர். #GoldSmuggled #Myanmar #3Crore
    சிலிகுரி:

    மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் இடுப்பில் சுற்றி இருந்த பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர்.

    அந்த தங்க கட்டிகள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக கடத்திவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 
    சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உனைஷ் என்பவர் வந்தார். அவர் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 988 கிராம் எடையுள்ள 52 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 
    ×