search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simran"

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் மலையாள நடிகை மாளவிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுகுறித்து மாளவிகா மோகனன் கூறும்போது,

    “ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகள். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்’ எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ் தெரியாததால் பக்கத்திலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 



    இப்படத்தில் மாளவிகா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லி என்பதால் வில்லனாக வரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #MalavikaMohanan

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினியை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் முதல் முறையாகத் தமிழில் நடித்து வருகிறார்.

    நவாசுதீன் ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ’ரஜினிகாந்த் செம ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்கும் அதிர்ஷ்டமான வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன்.

    வட இந்தியாவின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார்.



    அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு எங்கள் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை; இருந்தும் பாலிவுட் நடிகர்களான நாங்கள் 20, 25 பேரை கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றுகிறோம்“ என்று கூறியிருக்கிறார். #Petta #Rajinikanth #NawazuddinSiddiqui

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்தவரும், பிரபல இயக்குநருமான மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி - திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    சமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Petta #Rajinikanth #Mahendran

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார். #Petta #Rajinikanth #Sasikumar

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth
    ‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

    ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
    ‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன், வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து இருவருக்கும் சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.



    ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார்.

    இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்கிறார். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. #Petta #Rajinikanth #Sasikumar

    பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் நடிகை சிம்ரன், குறைவாதான் பேசுவார், ஆனால், நிறைய அர்த்தங்கள் என்று அவரைப் பற்றி கூறியுள்ளார். #Rajini #Petta #Simran
    சிம்ரன் அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டார். ‘சீமராஜா’வில் காளீஸ்வரியாக வந்து வில்லத்தனம் காட்டியவர் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார்.

    ரஜினியுடன் நடிப்பது பற்றி கூறும்போது, ‘இயக்குனரிடம் முழு கதையையும் கேட்ட பிறகே ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்பின் முதல் நாளே ரஜினியுடன் சேர்ந்து நடித்தேன். அவரது எளிமையும் அடக்கமும் என்னை ஆச்சர்யப்படுத்தின.

    அமைதியான மனிதர்; குறைவாதான் பேசுவார். ஆனா, அர்த்தங்கள் நிறைய இருக்கும். இந்தப் படத்துல எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருக்கு.

    படத்துல எனக்கும் அவருக்கும் டான்ஸ் கூட இருக்கு. என் 20 வருட சினிமாவுல ரஜினி தவிர மற்ற பெரிய நடிகர்களோடயும் சேர்ந்து நடிச்சிருக்கேன். ரஜினி கூட நடிக்கணும்ங்கிறது பெரிய கனவு. அது இப்போதான் நிறைவேறி இருக்கு.



    என் சின்ன மகன் ஆதித், ரஜினி ரசிகன். படப்பிடிப்புக்கு அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். ரஜினியை பார்த்ததும் ‘சிட்டி...சிட்டி’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். அவனை ரஜினிகிட்ட இருந்து கூட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு’ என்று கூறி உள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Petta #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

    ரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.

    அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன. இன்று காலை வெளியாகி இருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    ஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    ரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.

    1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

    1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா? என்ற யூகங்கள் பரவுகின்றன. இது போட்டோ ஷாப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். #Petta #Rajinikanth #Misa109

    ஜோடி படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து திரிஷாவும் ஒரே படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் பேட்டிளித்துள்ளார். #Trisha #Simran #Petta
    சிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும் திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.

    திரிஷா கூட ஜோடி படத்துல சேர்ந்து நடிச்ச நாள்களெல்லாம் ஞாபகம் இருக்கா, இப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்க என்ற கேள்விக்கு சிம்ரன் பதிலளிக்கும்போது, ‘திரிஷாவை முதல் முறை பார்த்த மொமெண்ட் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க சினிமாவுல தன்னை ஒரு நல்ல நடிகையா முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘ஜோடி’ படத்துல பார்த்தப்போவே இந்தப் பொண்ணு பெரிய ஆளா வரும்னு எனக்குத் தோணுச்சு. 



    டயலாக் இல்லாத சீன்கள்ல நடிக்கிறதுதான் இருக்கிறதுலேயே ரொம்பக் கஷ்டம். அதுல திரிஷா கில்லாடி. நானும் விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கிறேன். திரிஷாவும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. சினிமாவுல என்னை மாதிரி டான்ஸ் ஆடுற இன்னொரு நடிகைனு அவங்களைச் சொல்வேன். இத்தனை வருடம் ஒரு நடிகை நிலைத்திருக்கிறது, பெரிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் திரிஷா! என்று கூறியிருக்கிறார். 
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசாகிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசானது. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம். ஸ்டூடியோஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளையும் சீமராஜா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தகவல்படி, முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.



    முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்தார். #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. படத்திற்கு இதுவரை ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே வந்த வண்ணமாக உள்ளன. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத் தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான், பாலசுப்ரமணியம், விவேக் ஹர்ஷன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் டி.இமான் இசையில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவும் பிரம்மாண்டமாக உணர வைக்கிறது.

    படம் இன்று ரிலீசாகிய நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தார். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது, படம் முழுவதையும் ரசிகர்களுடம் இணைந்து பார்த்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வரலாறு அதாவது 14-ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட கதை ஒன்று உள்ளது. அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைவருக்கும் நன்றி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சீமராஜா' படத்தின் விமர்சனம். #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha
    சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

    கடைசியில் ஒரு வீடு மற்றும் சில வயல்வெளிகள் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் அந்த ஊர் மக்கள் நெப்போலியனை பெரிய ராஜா என்றும், சிவகார்த்திகேயனை சின்ன ராஜா என்றும் அழைக்கின்றனர்.



    ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் அளித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் ஒரு ராஜாவுக்கு உண்டான கெத்துடனும், மிடுக்குடனும் எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணம் செய்கிறார். ஒரு ராஜாவாக ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கணக்கு பிள்ளையாக சூரியும் எப்போதும் அவருடனேயே இருக்கிறார்.

    சிங்கப்பட்டி ஊருக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. புளியம்பட்டியில் பெரிய பணக்காரர் லால். அவரது மனைவி சிம்ரன். என்னதான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், புளியம்பட்டி மக்களும் சிவகார்த்திகேயன் குடும்பத்தையே ராஜாவாக பார்க்கின்றனர். இதனால் கடுப்பாகும் லால் மற்றும் சிம்ரன், சிவகார்த்திகேயனை சரிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.



    இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சமந்தாவை பார்க்கும் சிவகார்த்திகேயன் அவர் மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை சமந்தாவிடம் சொல்ல பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். ஆனால் சமந்தா, சிவகார்த்திகேயனின் காதல் ஏற்பதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் சந்தை போடுவதில் இரு ஊருக்கு இடையேயான சண்டை முற்ற, பிரச்சனை தீரும் வரையில் யாரும் அங்கு சந்தை போடக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கவும், சமந்தாவின் சம்மதத்தை பெறவும் ராஜாவான சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் எதிலும் பெரியதாக சிரத்தை காட்டாத சிவகார்த்திகேயனுக்கு தனது மூதாதையரின் பெருமை என்னவென்பதும் தெரியாமலேயே இருக்கிறார்.



    கடைசியில் சின்ன ராஜா சிவகார்த்திகேயன் தனது பூர்வ பெருமையை தெரிந்து கொண்டாரா? சந்தை போடுதில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்த்தார்? சிவகார்த்திகேயனின் காதல் தூதை சமந்தா ஏற்றுக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு ராஜாவாக சிவகார்த்திகேயன் தனக்கே உண்டான குறும்புத்தனத்துடன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணிப்பதும், கணக்குப்பிள்ளை சூரியை தன்னுடனேயே வைத்துக் கொள்வது, சமந்தாவுடன் காதல் என காமெடி, ஆக்‌ஷன், காதல், அதிரடி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனேயே பயணிக்கும் சூரிக்கும் படத்தில் பெரிய பங்கு இருக்கிறது. படம் முழுவதும் சிவகார்த்திகேயன் உடனேயே பயணிக்கிறார். எப்போதும் போல் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி, சண்டை எல்லாமே ரசிக்க வைக்கிறது. காதல் காட்சி, ரொமேன்ஸ் காட்சிகளில் கூட சூரி வரும் அளவுக்கு தனக்கு சமமான கதாபாத்திரத்தை சூரியுடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள். சூரி இனி சிக்ஸ்பேக் சூரி என்று அன்போடு அழைக்கப்படுவார். சிக்ஸ் பேக்குக்கான அவரது உழைப்பை பார்க்க முடிகிறது.



    உடற்கல்வி ஆசிரியராக சமந்தா படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் சமந்தாவில் சிலம்பம் சுற்றுவது சிறப்பாக வந்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் காட்சியும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்ரன், வில்லி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார். சிவகார்த்திகேயனுக்கு, சிம்ரன் சவால் விடும் காட்சிகளில் அனல் பறக்கிறது. லால் வில்லனுக்குண்டான மிடுக்குடன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்ரன் - லால் கூட்டணி சிறப்பாக வந்துள்ளது. நெப்போலியன் தான் ராஜா எனபதையே மறந்து ஒரு சாதாரண மனிதராக, ராஜாவுக்குண்டான குணநலன்களுடன் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

    மற்றபடி மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்தீப் சுர்னேனி, ரகு என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.



    தனது முதல் இரண்டு படங்களையும் கிராமத்து சாயலில் எடுத்தது போல், இந்த படத்தையும் ராஜா கதையை மையப்படுத்தி கிராமத்து சாயலில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவரது படங்களில் இருக்கும் காதல், காமெடி காட்சிகள் இதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். வசனங்களும் படத்திற்கு பலம் தான். 

    இசையும் மற்றும் ஒளிப்பதி தான் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சீமராஜா' விருந்து. #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha

    ×