என் மலர்

  சினிமா

  பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
  X

  பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Petta #Rajinikanth
  நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

  ரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.

  அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன. இன்று காலை வெளியாகி இருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

  ஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  ரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.

  1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

  1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா? என்ற யூகங்கள் பரவுகின்றன. இது போட்டோ ஷாப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். #Petta #Rajinikanth #Misa109

  Next Story
  ×