search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shoaib Malik"

    கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். #CPL #ShoaibMalik
    ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக் தொடரை போல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரிபியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இடம்பிடித்து விளையாடி வருகிறது.

    2018-ம் ஆண்டு தொடருக்கான கயானா அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடும் வருபவருமான சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.



    சோயிப் மாலிக் இதற்கு முன் வெளிநாட்டில் நடைபெறும் லீக்கில் வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் கமிலா விக்டோரியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். கரிபியன் பிரீமியர் லீக் தெடர் அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS
    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    பகர் சமான் (91), சோயிப் மாலிக் (43) ஆகியோரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.



    1990-ம் ஆண்டு சார்ஜாவில் ஆஸ்ட்ரால் - ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, வங்காள சேதம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    அதன்பின் தற்போதுதான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    பகர் சமான், சோயிப் மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆர்கி ஷார்ட் (76), ஆரோன் பிஞ்ச் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பகர் சமான், சஹிப்சதா பர்ஹான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    2-வது பந்தை மேக்ஸ்வெல் வைடாக வீசினார். இதில் அறிமுக வீரரான பர்ஹான் ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த ஹுசைன் தலாத் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் முதல் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து திணறியது பாகிஸ்தான். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அஹமது அதிரடியாக விளையாடி 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் அனுபவ வீரர் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பகர் சமான் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    30 பந்தில் அரைசதம் அடித்த பகர் சமான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சோயிப் மாலிக் 37 பந்தில் 43 ரன்களும், ஆசிஃப் அலி 11 பந்தில் 17 ரன்கள் விளாச பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பகர் சமான் தட்டிச் சென்றார்.
    நூறு டி20 போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் #PAKvAUS #ShoaibMalik
    ஜிம்பாப்வேயில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பிடித்துள்ளார். இது 36 வயதாகும் சோயிப் மாலிக்கிற்கு 100-வது டி20 போட்டியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் 100 டி20 போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.



    2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சோயிப் மாலிக் 2039 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் 28 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்திலும், எம்எஸ் டோனி 90 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்திலும் உள்ளார்.
    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். #ZIMvPAK #ShoaibMalik
    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஜிம்பாப்வேயில் நடைபெறும் இந்த தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் சோயிப் மாலிக் 24 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 37 ரன்கள் குவித்தார். அவர் 11 ரன்களை எட்டியபோது சர்வதேச டி20 போட்டியில் 99 போட்டியில், 92 இன்னிங்சில் 2000 ரன்களை பதிவு செய்தார்.



    இதன்மூலம் 2000 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மார்ட்டின் கப்தில், மெக்கல்லம் ஆகியோர் இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளனர்.
    பாகிஸ்தான் அணியின் 36 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #ShoaibMalik
    பாகிஸ்தான் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். 36 வயதான இவர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஃபிட்டாக இருந்தால் டி20 போட்டியில் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.



    19 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக 261 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 35.22 ஆகும். அத்துடன் 154 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷர்ஜாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன்கள் அடித்ததோடு ஓய்வு பெற்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக், 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். T20WorldCup #Pakistan #ShoaibMalik
    கயானா:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான சோயிப் மாலிக் 2015-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

    தற்போது சோயிப் மாலிக் வெஸ்ட்இண்டீசில் வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் கரிபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டியில் கயானா அமாசோன் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



    இந்த நிலையில் 36 வயதான சோயிப் மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘2019-ம் ஆண்டு ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எனது கடைசி உலக கோப்பை போட்டியாகும். ஆனால் 2020-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அது தான் எனது இலக்காகும். இந்த இரண்டும் பெரிய இலக்காகும். அதனை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எப்படி போகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்த இரண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாட முடியும் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார். #T20WorldCup #Pakistan #ShoaibMalik
    ×