search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selection"

    • சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது.
    • 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான, வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது.

    மொத்தம், 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது. சேலம் ஒன்றிய, 8-வது வார்டுக்கு, மனுதாக்கல் செய்த, 21 பேரில் தங்கப்பொண்ணு, மணிகண்டன் ஆகியோர் மனுக்கள் சரிவர பூர்த்தியாகாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு 19 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னாம்பள்ளி ஊராட்சி 8-வது வார்டில் தாக்கலான 2 மனுவில் ஒரு மனு தள்ளுபடி ஆகி, ஒரு மனு ஏற்கப்பட்டது.

    அதேபோல, பூவனூர் ஊராட்சி, 3-வது வார்டில் தாக்கலான 2-ல் ஒரு மனு ஏற்கப்பட்டது. புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் ஒரு மனு, இளவம்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் ஒரு மனு, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி 6-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் ஆனதால், மேற்கண்ட 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

    மொத்தம், தாக்கலான 47 மனுவில் 6 மனு தள்ளுபடி போக 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மனுவாபஸ் பெற கடைசி நாள் என்பதால், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் நடக்கும் ஊராட்சி வார்டு விபரம் அறிவிக்கப்படும், மேலும் 12 வார்டுகளில் 5 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள 7 வார்டுகளுக்கும் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு முடிவு வெளியீடு

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட்டனர். அதில், 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 15 ஆயிரத்து 879 பேர் மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    88.62 சதவீதம் தேர்ச்சி

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். அதில் மாணவர்கள் 82.47 சதவீதமும், மாணவிகள் 94.47 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளில் எண்ணிக்கை 114 ஆகும். 2020-ம் ஆண்டு 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. ஆனால் 2021-2022 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொண்டாட்டம்

    முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் 325 பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விபரங்களுடன் ஒட்டப்பட்டது. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விபரங்களை அறிந்து கொண்டனர்.

    பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ெசலுத்தி மாணவ- மாணவிகள் தாங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொண்டனர்.

    பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பறைகளில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • சேலத்தில் 8 மையங்களில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடக்கிறது.
    • முதல் கட்ட தேர்வு இன்று தொடக்கம் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    சேலம்:

    தமிழக போலீசில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முதல் கட்ட தேர்வு இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி ேசலத்தில் 8 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க 10 ஆயிரத்து 699 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.

    இன்று காலை பொது தேர்வு நடந்தது. மதியம் தமிழ் தனி திறன் தேர்வும் நடக்கிறது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வை எழுதினர். அதே போல நாளை போலீஸ் ஒதுக்கீட்டிற்கான தேர்வு நடக்க உள்ளது. அதில் 253 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதையொட்டி தேர்வு மையங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விஜிலென்ஸ் ஐ.ஜி. லெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

    • பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.58 சதவீதம் ஆகும்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 93.62 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.62 சதவீதம் ஆகும்.

    • தேர்வில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
    • நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு பிரிவின் கீழ் அரசு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான தேர்வு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    இதில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டியில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தமிழகம் முழுவதும் தாங்கள் விரும்பும் அரசு விடுதியில் விளையாட்டு கோட்டாவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

    ×