search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
    X

    சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

    • சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது.
    • 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான, வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது.

    மொத்தம், 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது. சேலம் ஒன்றிய, 8-வது வார்டுக்கு, மனுதாக்கல் செய்த, 21 பேரில் தங்கப்பொண்ணு, மணிகண்டன் ஆகியோர் மனுக்கள் சரிவர பூர்த்தியாகாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு 19 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னாம்பள்ளி ஊராட்சி 8-வது வார்டில் தாக்கலான 2 மனுவில் ஒரு மனு தள்ளுபடி ஆகி, ஒரு மனு ஏற்கப்பட்டது.

    அதேபோல, பூவனூர் ஊராட்சி, 3-வது வார்டில் தாக்கலான 2-ல் ஒரு மனு ஏற்கப்பட்டது. புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் ஒரு மனு, இளவம்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் ஒரு மனு, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி 6-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் ஆனதால், மேற்கண்ட 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

    மொத்தம், தாக்கலான 47 மனுவில் 6 மனு தள்ளுபடி போக 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மனுவாபஸ் பெற கடைசி நாள் என்பதால், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் நடக்கும் ஊராட்சி வார்டு விபரம் அறிவிக்கப்படும், மேலும் 12 வார்டுகளில் 5 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள 7 வார்டுகளுக்கும் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    Next Story
    ×