சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 10 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

சேலத்தில் 8 மையங்களில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடக்கிறது.முதல் கட்ட தேர்வு இன்று தொடக்கம் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 10 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதுகிறார்கள்
Published on

சேலம்:

தமிழக போலீசில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முதல் கட்ட தேர்வு இன்று தொடங்குகிறது.

இதையொட்டி ேசலத்தில் 8 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க 10 ஆயிரத்து 699 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.

இன்று காலை பொது தேர்வு நடந்தது. மதியம் தமிழ் தனி திறன் தேர்வும் நடக்கிறது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வை எழுதினர். அதே போல நாளை போலீஸ் ஒதுக்கீட்டிற்கான தேர்வு நடக்க உள்ளது. அதில் 253 பேர் பங்கேற்க உள்ளனர்.

இதையொட்டி தேர்வு மையங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விஜிலென்ஸ் ஐ.ஜி. லெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com