search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Stadium"

    • வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது.
    • போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளருமான திருமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லெட்சு மணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன், நடுவர்கள் சுந்தர் ராஜ், உமாநாத், எடிசன் , பசுங்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி க்கான ஏற்பாடுகளை கங்கை கொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர் கார்த்திக்குமார் செய்திருந்தார்.

    • பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.
    • அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய கருவேலம் கோப்பைக்கான ஆக்கி போட்டி இன்று காலையுடன் முடிவு பெற்றது. ஆண்கள் பிரிவில் பாளை லெவன் ஆக்கி அணியும், பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணியும் வெற்றிக்கோப்பைகளை தட்டிச்சென்றனர். முன்னதாக இன்று காலையில் இறுதி போட்டிகளை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் தலைமை தாங்கி வெற்றிக் கோப்பைகளையும், தனி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆக்கி கழகம் சேவியர் ஜோதி சற்குணம், முருகேசன், பீர் அலி, ஜான்சன், மங்கை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.
    • போட்டிகளை துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கருவேலம் கோப்பைக்கான நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொடக்கவிழா இன்று காலை தொடங்கியது.

    இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் செய்து வருகின்றனர்.

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் தொடக்கி வைத்தார். குறிப்பாக 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்ப ந்தயம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடை பெற்றது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதி க்கப்பட்டனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்து தேசிய அளவிலான போட்டி களில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.
    • இதில் 49 பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    வட்டார அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

    நாளை வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம், நீளம் தாணடுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 16 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

    போட்டியில் வட்டார அளவிலான 49 பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு 16 வகையான போட்டிகள் நடைபெற்றது.

    2-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டிக்கான ஏற்பாடு களை மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை அமலா மற்றும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

    • தேர்வில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
    • நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு பிரிவின் கீழ் அரசு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான தேர்வு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    இதில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டியில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தமிழகம் முழுவதும் தாங்கள் விரும்பும் அரசு விடுதியில் விளையாட்டு கோட்டாவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

    ×