என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களிடம் கலந்தாய்வு நடத்தப்பட்ட காட்சி.
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் அரசு விடுதியில் சேர மாணவர்களுக்கு தேர்வு
- தேர்வில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
- நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
நெல்லை:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு பிரிவின் கீழ் அரசு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான தேர்வு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீச்சல் போட்டி உள்ளிட்ட 6 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தமிழகம் முழுவதும் தாங்கள் விரும்பும் அரசு விடுதியில் விளையாட்டு கோட்டாவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
Next Story






