என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஆக்கி இறுதிப்போட்டி
    X

    இறுதிப்போட்டியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்த காட்சி.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஆக்கி இறுதிப்போட்டி

    • பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.
    • அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய கருவேலம் கோப்பைக்கான ஆக்கி போட்டி இன்று காலையுடன் முடிவு பெற்றது. ஆண்கள் பிரிவில் பாளை லெவன் ஆக்கி அணியும், பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணியும் வெற்றிக்கோப்பைகளை தட்டிச்சென்றனர். முன்னதாக இன்று காலையில் இறுதி போட்டிகளை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் தலைமை தாங்கி வெற்றிக் கோப்பைகளையும், தனி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆக்கி கழகம் சேவியர் ஜோதி சற்குணம், முருகேசன், பீர் அலி, ஜான்சன், மங்கை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×