search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scooter"

    • 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டது.
    • ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிகவும் பிரபல ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 6ஜி பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிரபல ஸ்கூட்டர் பெயரில் இருந்து 6ஜி மட்டும் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

    பெயர் மட்டுமின்றி 6ஜி பிராண்டிங் கொண்டிருந்த புகைப்படங்களும் மாற்றப்பட்டு இருக்கிறது. 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின் இதைத் தொடர்ந்து அறிமுகமான ஸ்கூட்டர்கள் ஆக்டிவா பெயருடன் 4ஜி, 5ஜி மற்றும் 6ஜி பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பெயரில் இருந்து 6ஜி நீக்கப்பட்டு இருக்கிறது.

    பிரபல ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்று கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா இ எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    • 29 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும்ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி,சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைதேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும், தமிழகஅரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும்பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுநமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிநலத்துறையின் சார்பில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம்ரூ.24.21 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும்நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரட்சி ஒன்றியங்களை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
    • 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.

    அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • 2023 யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2023 ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த பிரிவில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் இது ஆகும். புதிய ஏரோக்ஸ் மாடல் தவிர 2023 MT-15 V2, R15 V4 மற்றும் R15S மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 மாடல்கள் புதிய அம்சங்கள் மற்றும் நிறங்களில் கிடைக்கிறது.

    2023 ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ள டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம், எவ்வித பாதைகளிலும் ஸ்கூட்டரின் வீல்-ஸ்பின்-ஐ குறைத்து சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது. இத்துடன் புதிய ஏரோக்ஸ் மாடல் E20 எரிபொருளில் இயங்கும் வகையிலும், OBD 2 விதிகளுக்கு ஏற்றார் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் கொண்ட 155சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் உள்ள லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட மோட்டார் 15பிஎஸ் பவர், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2023 ஏரோக்ஸ் மாடலில் ஹசார்ட் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், முற்றிலும் புதிய சில்வர் நிறத்திலும் கிடைக்கிறது.

    MT-15 V2 வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்கும் நோக்கில் யமஹா நிறுவனம் 2023 மாடலை டார்க் மேட் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ப்ளூடூத் கனெக்ட் அம்சம், விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ், டிசிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.

     

    2023 R15 V4 மற்றும் R15S வேரியண்ட்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2023 R15 V4 மாடலில் குயிக்ஷிஃப்டர் அம்சம் மற்றும் புதிதாக வைட் நிறத்தில் கிடைக்கிறது. 2023 R15S மாடலில் 155சிசி என்ஜின் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2023 R15 V4, R15S மற்றும் MT-15 V2 மாடல்களில் லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    OBD2 விதிகளுக்கு பொருந்தும் புதிய என்ஜினுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.4 பிஎஸ் பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     

    விலை விவரங்கள்:

    2023 யமஹா ஏரோக்ஸ் 155 சில்வர் நிறம் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 800

    2023 யமஹா R15 V4 இண்டன்சிட்டி வைட் நிறம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்து 900

    2023 யமஹா MT-15 V2 மேட் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900

    2023 யமஹா R155S ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 400

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • யமஹா மோட்டார் நிறுவனத்தின் மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
    • வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் ஐந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம் தனது ஃபசினோ 125 Fi ஹைப்ரிட், ரே இசட்ஆர் 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேஞ்ச் மூலம் வழங்கப்படும் அதிக மைலேஜ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்

    வாடிக்கையாளர்களிடையே அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச்' பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. இதில் மொத்தம் 42 யமஹா வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

    கோயம்புத்தூரில் மெகா மைலேஜ் சேலஞ்ச் செயல்பாடு, பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட விளக்க அமர்வுடன் தொடங்கியது. இதில், போட்டியாளர்களுக்கு திறமையான சவாரி நடத்தை மற்றும் சவாரிக்கு திட்டமிடப்பட்ட பாதை குறித்து நிபுணர்களால் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்கள் 30 கிலோமீட்டர் நீளமான பயணத்தை மேற்கொள்வதற்கு முன் அவர்களின் ஸ்கூட்டர்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

     

    30 கிலோமீட்டர் பாதையில் நகர போக்குவரத்து, அலைகள் மற்றும் திறந்த சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓட்டுநர் நிலைமைகளை உள்ளடக்கியது. பங்கேற்பாளர்கள் ஸ்கூட்டரின் இடைநீக்கத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. சவாரி முடிந்து அவர்கள் இடத்திற்குத் திரும்பியதும், ஸ்கூட்டர்கள் முந்தைய எரிபொருள் அளவைப் பொருத்து நிரப்பப்பட்டன. மேலும் சவாரியின் போது வழங்கப்பட்ட மைலேஜைக் கணக்கிட பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு பதிவு செய்யப்பட்டது.

    யமஹாவின் நன்றியுணர்வின் அடையாளமாக, இந்த மெகா மைலேஜ் சவால் நடவடிக்கையில் பங்கேற்கும் அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களை 10-புள்ளி ஆய்வுக்கு உட்படுத்தி, இலவச வாட்டர் வாஷ் செய்யப்பட்டது. இதோடு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மெகா மைலேஜ் சவாலில் பங்கேற்ற 42 வாடிக்கையாளர்களிடம் இருந்து, செயல்பாட்டின் போது அதிக மைலேஜ் பெற்ற முதல் 5 வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு அட்டைகள் வழங்கப்பட்டன.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2023 ஆக்டிவா மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 2023 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஐந்து வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா 125 மாடல் OBD2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் H ஸ்மார்ட் வேரியண்டையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா ரேஞ்ச்- டிரம், டிரம் அலாய், டிஸ்க் மற்றும் H ஸ்மார்ட் என நான்கு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    125சிசி ஆக்டிவா மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன கௌல், அப்ரனில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள், பாடி நிறத்தால் ஆன முன்புற ஃபெண்டர், பாடி பேனல் மற்றும் அப்ரனில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய 2023 ஆக்டிவா மாடல்- பியல் நைட் ஸ்டார்ட் பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், ரிபல் ரெட் மெட்டாலிக், பியல் பிரஷியஸ் வைட் மற்றும் மிட்நைட் புளூ மெட்டாலிக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

     

    புதிய ஆக்டிவா 125 மாடலில் ஹோண்டா நிறுவனம் OBD2 விதிகளுக்கு தேவையான மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 123.97சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பொசிஷன் லேம்ப்கள், மேம்பட்ட ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம், ஏசிஜி ஸ்டார்டர், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு எஞ்சின் இன்ஹிபிட்டர் அம்சம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஸ்கூட்டரின் முந்தைய வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விலை விவரங்கள்:

    ஹோண்டா ஆக்டிவா டிரம் ரூ. 78 ஆயிரத்து 920

    ஹோண்டா ஆக்டிவா டிரம் அலாய் ரூ. 82 ஆயிரத்து 588

    ஹோண்டா ஆக்டிவா டிஸ்க் ரூ. 86 ஆயிரத்து 093

    ஹோண்டா ஆக்டிவா H-ஸ்மார்ட் ரூ. 88 ஆயிரத்து 093

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது புதிய ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஆக்டிவா 125 மாடல் ஸ்மார்ட் கி அன்லாக் உள்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்ர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஆக்டிவா 125 மாடல் விவரங்கள் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய வேரியண்ட் ஆக்டிவா 125 H ஸ்மார்ட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

    புதிய வேரியண்ட்-இல் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதன் ஸ்மார்ட் கீ இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட் அன்லாக் வசதி வழங்கப்பட உள்ளது. இது ஸ்கூட்டர் மற்றும் அதன் ஃபியூவல் லிட்-ஐ அதிகபட்சம் 2 மீட்டர் தொலைவில் இருந்தபடி லாக் / அன்லாக் செய்ய அனுமதிக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் ஃபைண்ட் அம்சம் ஸ்கூட்டர் பார்கிங்கில் கண்டறிய ஏதுவாக இண்டிகேட்டர்களை இயக்குகிறது.

     

    இதுதவிர ஸ்மார்ட் ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை புஷ் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்துவிடுகிறது. இத்துடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சேஃப் அம்சம் ஸ்கூட்டரை விட 2 மீட்டர்கள் தொலைவுக்கு சென்றதும், ஸ்கூட்டரை லாக் செய்துவிடும். இதுதவிர எல்இடி ஹெட்லைட், சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஆக்டிவா 125 H ஸ்மார்ட் டிசைன் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அதன்படி புதிய மாடலின் ஹெட்லைட், இண்டிகேட்டர் மற்றும் க்ரோம் பிட் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படுகிறது. சிங்கில் பீஸ் சீட் மற்றும் கிராப் ரெயில் உடன் பக்கவாட்டு பேனல்களும் மாற்றமின்றி வழங்கப்படுகிறது.

    புதிய மாடலிலும் 124சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இது 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா 6ஜி மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
    • புதிய ஆக்டிவா மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் முன்னணி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் போதிலும், ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. புதிய அப்டேட்கள் பயனர்களின் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஆக்டிவா மாடலில் ஹோண்டா ஸ்மார்ட் கீ, H ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை வழங்கியது. கார்களில் வழங்கப்படும் ஆட்டோ லாக்/அன்லாக், பார்க்டு லொகேஷன் ஃபைண்டர் மற்றும் கீலெஸ் ஸ்டார்ட் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இதைத்தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி மாடலுக்கு மேலும் சில அப்டேட்களை வழங்கும் என தெரிகிறது.

    ஹோண்டா ஷைன் 100 வெளியீட்டு நிகழ்வின் போது புதிய அப்டேட் பற்றிய தகவல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா H ஸ்மார்ட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    ஆக்டிவா 6ஜி மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய வேரியண்டில் H ஸ்மார்ட் கீலெஸ் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டிவா மாடலில் அனலாக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஃபோர்சா 350 மாடலில் 330சிசி லிக்விட் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடலுக்கான காப்புரிமை கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஃபோர்சா 350 மேக்சி ஸ்கூட்டரை இந்தியாவில் காப்புரிமை கோரி இருக்கிறது. எவ்வித வெளியீடு திட்டமும் இன்றி ஹோண்டா ஏற்கனவே பல வாகனங்களை இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. அந்த வரிசையில், ஹோண்டா இவ்வாறு செய்து முதல் முறை இல்லை.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற போதிலும்,ஃபோர்சா 350 மாடல் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மேக்சி ஸ்கூட்டர் ஜப்பான், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய வேரியண்டில் ஃபோர்சா 350 மாடல் பட்ச் ஸ்டைலிங், கூர்மையான பாடி பேனல்கள், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய மற்றும் டிரான்ஸ்பேரண்ட் வைசர், ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது.

     

    இளம் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் ஃபோர்சா கச்சிதமான மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதில் 330சிசி, சிங்கில் சிலண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 28.8 ஹெச்பி பவர், 31.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக்குகள், பிரேக்கிங்கிற்கு முன்புறம் 256mm டிஸ்க், பின்புறம் 240mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மேக்சி ஸ்கூட்டரில் யுஎஸ்பி சாக்கெட், ஹோண்டா ஸ்மார்ட் கீ, டுவன் பாட் கன்சோல், எல்சிடி ஸ்கிரீனில்- ட்ரிப் மீட்டர், ஒடோமீட்டர், ஃபியூவல் லெவல் பார் மற்றும் இதர விவரங்கள் காண்பிக்கப்படுகிறது. ஃபோர்சா 350 மாடல் தற்போது சர்வதேச சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    • சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டர் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய ஸ்கூட்டர்கள் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டுள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய E20 விதிகளுக்கு பொருந்தும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில், புதிய ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும். சுசுகி நிறுவனத்தின் அக்சஸ் 125, அவெனிஸ் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் மாடல்கள் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

     

    புதிய ஸ்கூட்டர் மாடல்கள் OBD2-A விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் மேம்பட்ட ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களை புதிய E20 மற்றும் OBD2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. இதில் யமஹா மோட்டாரைச்கிள் இந்தியா, மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார் மற்றும் ரெனால்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    சுசுகியின் ஸ்கூட்டர் மாடல்களில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    சுசுகி அக்சஸ் பேஸ் வேரியண்ட் ரூ. 79 ஆயிரத்து 400

    சுசுகி அக்சஸ் டாப் வேரியண்ட் ரூ. 89 ஆயிரத்து 500

    பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 93 ஆயிரம்

    பர்க்மேன் ஸ்டிரீட் ரைடு கனெக்ட் எடிஷன் ரூ. 97 ஆயிரம்

    அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷன் ரூ. 92 ஆயிரம்

    அவெனிஸ் ரேஸ் எடிஷன் ரூ. 92 ஆயிரத்து 300

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.
    • இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பிட்ட பேன்சி நம்பர்களை வாங்குவதற்காக சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.

    அதில் சிலர் தங்களது வாகனங்களுக்கு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் அதிர்ஷ்ட எண், தங்களது பிறந்த நாள், வருடம் கொண்ட எண் என விதவிதமான எண்களை கேட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும்போது, குறிப்பிட்ட எண்ணுக்காக கடும் போட்டி ஏற்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஏலத்தில் விடுகிறார்கள். அது போன்று இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தான் 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஸ்கூட்டிக்கு பேன்சி நம்பர் பெறுவதற்காக ரூ.1 கோடி செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் வாங்கிய ஸ்கூட்டிக்காக எச்.பி.-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக போக்குவரத்து ஆணையம் நடத்திய ஆன்-லைன் ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எச்.பி.-99-9999 என்ற எண்ணை கேட்டு 26 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1,000 ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவரும் ஏலத் தொகையை உயர்த்தி கொண்டே சென்ற நிலையில், அதில் ஒருவர் அந்த எண்ணை ரூ.1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பெற்றார்.

    இரு சக்கர வாகன பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணை பெறுவதற்காக ரூ.1.12 கோடி செலவழித்த நபர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

    • யமஹா நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய 2023 ஸ்கூட்டர்களின் விலை ரூ. 78 ஆயிரத்து 600 என துவங்குகின்றன.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2023 ஃபசினோ மற்றும் ரே ZR சீரிஸ் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்கூட்டர்களும் 125சிசி என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றன. புதிய ஃபசினோ 125 மாடல் Fi ஹைப்ரிட் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

     

    எனினும், ரே ZR மாடல்- ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ரே ZR ஸ்டிரீட் ரேலி1 25 Fi ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 2023 மாடல்களில் 125 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 8 ஹெச்பி பவர், 10.3 நியியூட்டன் டார்க் இழுவிசசையை வெளிப்படுத்துகிறது.

     

    புதிய ஸ்கூட்டர்கள் தற்போது OBD-II சென்சார் மற்றும் E-20 ஃபியூவல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. OBD-II சென்சார் கொண்டு என்ஜின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் பற்றிய விவரங்களை ரியல்டைமில் அறிந்து கொள்ளலாம். 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை Y கனெக்ட் செயலிக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஃபசினோ டிரம் (விவிட் ரெட், எல்லோ காக்டெயில், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 78 ஆயிரத்து 600

    ஃபசினோ டிரம் (கூல் புளூ மெட்டாலிக் மற்றும் டார்க் மேட் புளூ) ரூ. 79 ஆயிரத்து 600

    ஃபசினோ டிஸ்க் (விவிட் ரெட், எல்லோ காக்டெயில், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 88 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ) ரூ. 89 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல்) ரூ. 90 ஆயிரத்து 230

    ஃபசினோ டிஸ்க் (டார்க் மேட் புளூ ஸ்பெஷல்) ரூ. 91 ஆயிரத்து 030

    ரே ZR டிரம் (மெட்டாலிக் பிளாக், சியான் புளூ மற்றும் மேட் ரெட்) ரூ. 82 ஆயிரத்து 730

    ரே ZR டிஸ்க் (சியான் புளூ, மேட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக்) ரூ. 88 ஆயிரத்து 530

    ரே ZR டிஸ்க் (ரேசிங் புளூ மற்றும் டார்க் மேட் புளூ) ரூ. 89 ஆயிரத்து 530

    ரே ZR ஸ்டிரீட் ரேலி (மேட் காப்பர்) ரூ. 92 ஆயிரத்து 530

    ரே ZR ஸ்டிரீட் ரேலி (மேட் பிளாக் மற்றும் லைட் கிரே வெர்மிலன்) ரூ. 93 ஆயிரத்து 530

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ×