search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புதிய ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி
    X

    புதிய ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி

    • சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டர் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய ஸ்கூட்டர்கள் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டுள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய E20 விதிகளுக்கு பொருந்தும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில், புதிய ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும். சுசுகி நிறுவனத்தின் அக்சஸ் 125, அவெனிஸ் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் மாடல்கள் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ஸ்கூட்டர் மாடல்கள் OBD2-A விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் மேம்பட்ட ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களை புதிய E20 மற்றும் OBD2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. இதில் யமஹா மோட்டாரைச்கிள் இந்தியா, மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார் மற்றும் ரெனால்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    சுசுகியின் ஸ்கூட்டர் மாடல்களில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    சுசுகி அக்சஸ் பேஸ் வேரியண்ட் ரூ. 79 ஆயிரத்து 400

    சுசுகி அக்சஸ் டாப் வேரியண்ட் ரூ. 89 ஆயிரத்து 500

    பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 93 ஆயிரம்

    பர்க்மேன் ஸ்டிரீட் ரைடு கனெக்ட் எடிஷன் ரூ. 97 ஆயிரம்

    அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷன் ரூ. 92 ஆயிரம்

    அவெனிஸ் ரேஸ் எடிஷன் ரூ. 92 ஆயிரத்து 300

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×