search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand smuggling"

    மையூர் அருகே ஆற்றில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவெண்ணைநல்லூர் அருகே சி மெய்யூர் பகுதிகள் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பகுதியில் நேற்று சென்றனர். அப்போது சீமையூர் அருகே ஆற்றில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி முற்பட்டனர் அப்போது போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடி வட்டனர். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி மோடி அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தனி பிரிவு தலைமை போலீசார் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு 2 மாட்டு வண்டிகள் வந்தது.

    இதை பார்த்த போலீசார் உடனே 2 மாட்டு வண்டிகளை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், அய்யனார் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓட்டப்பிடாரம் பகுதியில் முறையான அனுமதி சீட்டு இன்றி எம்சாண்ட் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
    • ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் ரோட்டில் முப்பிலிவெட்டி பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் பகுதியில் முறையான அனுமதி சீட்டு இன்றி எம்சாண்ட் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் ரோட்டில் முப்பிலிவெட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, முறையான அனுமதி சீட்டு இல்லாமல் மணல் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதட்டப்பாறையை சேர்ந்த லாரி டிரைவர் அருண்பாலாஜி (வயது35) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் 3 யூனிட் எம்சாண்ட் மணலையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லெவிஞ்சிபுரம் கிராமத்தின் வருவாய் ஆய்வாளர் ஜெபா நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள லெவிஞ்சிபுரம் கிராமத்தின் வருவாய் ஆய்வாளர் ஜெபா நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றார். அப்போது கண்ணன்குளம் பகுதியில் ஒரு தென்னந்தோப்பு அருகே சிலர் ஜே.சி.பி. மூலமாக லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அதிகாரியை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் ஜெபா பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் போலீசார் அதிரடி மணல் கடத்திய மாட்டுவண்டிகள்- ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
    • நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆற்றில் மணல் கடத்திவிட்டுஆலடி ரோடு வழியாக வந்து கொண்டிருந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதேபோல விருத்தாசலம் பூதாமூர் அருகே உள்ள ஏனாதிமேடு என்ற பகுதியில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆட்டோ ஒன்றை பிடிக்க போலீசார் பிடிக்க முயன்றபோது ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டி வந்த நபர் தப்பி ஓடினார். மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டி அருகே கெடிலம் ஆறு பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்பட்டது.
    • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

    கடலூர்:

    கெடிலம் ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தினர்.

    போலீசாரை கண்டவுடன்மாட்டு வண்டியை ஓட்டிவந்தவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு ஓடினார். உடனே போலீசா ர்வண்டி சோதனைசெய்தனர். அதில் அரசுஅனுமதியின்றி திருட்டு தனமாக அரையூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.உடனடியாக மாட்டுவண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியகாந்தலவாடியை சேர்ந்த மாயவனைதேடி வருகின்றனர்.

    • மணல் கடத்தலின் போது சம்பவம் போலீசுக்கு பயந்து ஓடிய விவசாயி மின் வேலியில் சிக்கினார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி.எடையாறு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தென்பெண்ணையாறு ஓடுகிறது. இங்கு அந்த பகுதியில் மர்ம மனிதர்கள் மாட்டு வண்டியில் இரவு-பகல் பாராமல் மணல் திருடி வருகிறார்கள். அதன்படி டி.எடையாறு கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 45) என்பவர் தென்பெண்ணையாற்றில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டிருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு எட்டியது.தகவலறிந்த போலீசார் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த பழனி அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் செல்லும் வழியில் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் காட்டு பன்றிக்காக மின்வேலி போடப்பட்டு இருந்தது.

    இதனை கவனிக்காத பழனி அந்த வழியாக சென்ற போது மின் வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள விவசாயிகள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய பழனியை தூக்கி கொண்டு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை பார்த்ததும், டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வடபாலப்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தெத்துகாடு ஓடை அருகே வந்து கொண்டிருந்த டிராக்டரை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும், டிரைவர் டிராக்டரை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

    இதையடுத்து போலீசார், அந்த டிராக்டரை பார்த்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அதனை தொடர்ந்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, மணல் கடத்தல் தொடர்பாக வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செட்டிபாளையத்தில் மணல் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    செட்டிபாளையம்:

    கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மற்றும் போலீசார் ராஜசேகர், கார்த்திக் ஆகியோர் பெரியகுயிலி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்து லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியில் முறையான எந்த ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியகுயிலி பிரிவை சேர்ந்த விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி பறிமுதல் செய்து விஜய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அரக்கோணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் மோதி தந்தை மகன் பலியானதையடுத்து டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35) கூலி தொழிலாளி. இவருக்கு ஆகாஷ் (7), தினேஷ் (5). 2 மகன்கள் உள்ளனர். 3 பேரும் நேற்று இரவு பள்ளூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஜினி மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். ஆகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனையடுத்து டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தகவலறிந்த ரஜினியின் உறவினர்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது இதன் காரணமாக பல உயிர்சேதம் ஏற்படுகிறது.

    எனவே மணல் கடத்தலை தடுத்து ரஜி சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

    விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ராஜேஷ் (30) மற்றும் டிரைவர் சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகரசம்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி பகுதியை அடுத்த ஏ.மோட்டூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கழுதைகள் மூலம் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு தென்பெண்ணையாற்றில் இருந்து கழுதைகள் மூலம் மணல் அள்ளி வந்து செந்தில் என்பவரது தென்னந்தோப்பில் குவித்து வைத்து மினிடோர் ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. 

    உடனே போலீசார் மணல் கடத்தி செல்ல முயன்ற செந்திலையும், அதே பகுதியைச் சேர்ந்த முருகனையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினிடோர் ஆட்டோவையும், 1  யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
    நாகையில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த நாகூர் குயவர் தெருவை சேர்ந்த மரிய கண்ணு மகன் 
    ரஞ்சித் (வயது 24) என்பவரை கைது செய்தனர். 
    ×