search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Safety"

    • மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமிற்கு திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாட்டுநல பணி திட்ட அலுவலர் யூகேஷ்வர வேற்று பேசினார். போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் பெருமாள், செண்பகவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர்.

    முகாமில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், சங்க செயலாளர் ஜெயராமன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.


    • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
    • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கி போக்குவரத்து சட்டம் மற்றும் விதிகள் குறித்தும், விபத்தில்லாமல் சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 2) சுரேஷ் விஸ்வநாதன் பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்தும், போக்குவரத்து சிக்னல்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

    கருத்தரங்கில், பள்ளி நிர்வாக அதிகாரி சபரி முத்துகுமார் உட்பட திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் செல்வகாந்தி நன்றி கூறினார்.

    அரியலூர், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலையில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நடந்த 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தேரடி, சத்திரம், மாதா கோவில், ஒற்றுமை திடல், அரண்மனை தெரு, வண்ணான் குட்டை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் அரியலூர் பஸ் நிலையம் பின்புறம் வாகன சோதனை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிய 3 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகனம் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியை ஏற்க செய்து பின்னர் புதிய ஹெல்மெட் ஒன்றை இலவசமாக வழங்கினார். இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, தா.பழூர் ரோடு, 4 ரோடு, திருச்சி ரோடு, பஸ் நிலையம் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் நன்றி கூறினார். 
    திருவண்ணாமலையில் சாலைபாதுகாப்பு குறித்து வெளிநாட்டு பயணிகள் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருவண்ணாமலை:

    சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் திருவண்ணமலை டவுன் போலீசார் மூலம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.

    தொடர்ந்து திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் வெளிநாட்டினர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் பூத நாராயணர் கோவிலில் இருந்த கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணமாக சின்னக்கடை வீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    பின்னர் பஸ் நிலையம் எதிரில் பொது மக்களுக்கு வெளிநாட்டினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். வெளிநாட்டினர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

    இது குறித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்ட வெளிநாட்டு பயணிகளிடம் கேட்டபோது, ‘‘இங்கு இருச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் வேகமாக செல்கின்றனர். சாலை பாதுகாப்பு விதிகளை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை.

    ஆனால் எங்கள் நாடான ஜெர்மனியில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுபவர்கள் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும்.

    இல்லையென்றல் கடுமையான அபராதம் விதிக்கப்படும். எனவே அனைவரும் சாலை பாதுகாப்பு விதியை பின் பற்ற வேண்டும்’’ என்றனர்.

    பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதன் மூலமாக சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெரம்பலூர் போக்குவரத்துத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது.



    இதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். இந்த ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்கவசம். படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் நகரை வலம் வந்து ரோவர் ஆர்ச்சில் ஊர்வலத்தை முடித்து கொண்டனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஹெல்மெட் அணிந்து ஓட்டிய இரு சக்கர வாகனங்களின் ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலம் ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. பாலக்கரையில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிய போது, அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் புகழேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ் (நிலை-1), பெரியசாமி (நிலை-2), அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் தா.பழூர் மற்றும் அதனை சுற்று வட்டார கிராம பகுதிகளில் சாலை பாதுகாப்பு, விபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சண்முகம், அண்ணாதுரை தலைமையில் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது.

    பைக் ரேசிங் போன்றவை சாலையில் தவிர்க்க வேண்டும், மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும். அதிகபாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ-மாணவிகளிடமும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர். 
    வாழப்பாடியில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமின்றி அவருடன் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜ் ஜார்ஜ் உத்தரவின் பேரில், போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்ய மூர்த்தி வழிகாட்டுதலின் பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர்கள் கோபால், சுந்தரராஜன் மற்றும் போலீஸார், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் அமர்ந்து செல்லும் ஆண், பெண் இருபாலரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்பதால், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென, வாழப்பாடி போலீசார் அறிவுரை வழங்கினர்.

    ×