search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainy season"

    • வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
    • சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் மத்தியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் கிராமத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இக்குளத்தில் வடிந்து நிரம்பும். மேலும் கருப்பூர் மெயின்ரோட்டில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் அந்தளி பாசன வாய்க்காலிலிருந்து வரும் நீரும் இக்குளத்தில் வடிந்து நிரம்பி குளத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பாசன வாய்க்காலில் வடிந்து கிராமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கச் செய்கிறது.

    2 மீட்டருக்கு மேல் அகலமான இந்த குளத்து நீர் வடிகால் வாய்க்கால் சுமார் 1 மீட்டருக்கு மேல் வாய்க்காலின் இருபுறமும் உள்ள வயல்களோடு சேர்த்து வரப்புகள் அமைக்ப்பட்டுள்ளதால் வாய்க்கால் 2 அடி அகலமுடையதாக குறுகிவி ட்டது. இதனால் அந்தளி வாய்க்காலிருந்து வரும் தண்ணீரும் மழைக்காலத்தில் கிராமத்தில் பெய்யும் மழை நீரும் ஒரே நேரத்தில் வடியும் போது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, குழிமாத்தூர் கிராம பஞ்சாயத்துக் குளத்திலிருந்து செல்லும் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அகலப்படுத்தி, மழைக்காலங்களில் குளத்திலிருந்து வடியும் நீர் முழுமையாக வடிந்து செல்லுமாறு தூர்வாரியும் புதுப்பித்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
    • திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

    திருப்பூர் :

    பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.

    மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.

    மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.

    இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

    மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions
    சென்னை:

    மழைக்காலங்களில், மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையைப் போக்க மழைக்காலங்களில் விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. அதாவது, வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும், ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.  கோவில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்  பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-



    மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.  மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும்.  மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.   

    விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

    மழை காரணமாக  கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

    திருவிழா போன்றவற்றிற்கு  உள்ளூர் விடுமுறை விடும்போது  ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.  

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions 
    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கோவை மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
    கோவை:

    கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடமாடவோ கூடாது. இடி- மின்னலின்போது மின் கம்பிகள், கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் பந்தல் அமைக்க விளம்பர பலகைகளை பொருத்த கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கவோ கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகே இருக்க வேண்டாம்.

    ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மறறும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயிணை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய கூடாது. மழை காலங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் விழிப்போடும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×