search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்து பாசன வாய்க்காலை மீட்க வேண்டும்
    X

    ஆக்கிரமிப்பில் உள்ள பாசன வாய்க்கால்.

    திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்து பாசன வாய்க்காலை மீட்க வேண்டும்

    • வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
    • சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் மத்தியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் கிராமத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இக்குளத்தில் வடிந்து நிரம்பும். மேலும் கருப்பூர் மெயின்ரோட்டில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் அந்தளி பாசன வாய்க்காலிலிருந்து வரும் நீரும் இக்குளத்தில் வடிந்து நிரம்பி குளத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பாசன வாய்க்காலில் வடிந்து கிராமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கச் செய்கிறது.

    2 மீட்டருக்கு மேல் அகலமான இந்த குளத்து நீர் வடிகால் வாய்க்கால் சுமார் 1 மீட்டருக்கு மேல் வாய்க்காலின் இருபுறமும் உள்ள வயல்களோடு சேர்த்து வரப்புகள் அமைக்ப்பட்டுள்ளதால் வாய்க்கால் 2 அடி அகலமுடையதாக குறுகிவி ட்டது. இதனால் அந்தளி வாய்க்காலிருந்து வரும் தண்ணீரும் மழைக்காலத்தில் கிராமத்தில் பெய்யும் மழை நீரும் ஒரே நேரத்தில் வடியும் போது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, குழிமாத்தூர் கிராம பஞ்சாயத்துக் குளத்திலிருந்து செல்லும் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அகலப்படுத்தி, மழைக்காலங்களில் குளத்திலிருந்து வடியும் நீர் முழுமையாக வடிந்து செல்லுமாறு தூர்வாரியும் புதுப்பித்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×