search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விபத்து"

    • சக ஊழியர்கள் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

    சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் சுரேஷ் மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனிருந்த சக ஊழியர்கள் அவரைக் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுரேசின் தந்தை சீனிவாசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடுகளுக்கு தழை பறித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). இவர் திருப்பத்தூர் அரசு பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே இருந்த மரத்தில் இரும்பு தொரட்டி மூலம் தழைகளை பறித்தார். அப்போது கண்ணதாசன் கையில் பிடித்திருந்த தொரட்டி வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது திடீரென அவர் மீது

    மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை, அவரது தாயார் ரத் தினம்தூக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் மின் சாரம் தாக்கி உள்ளது.

    இதை பார்த்த பொதுமக் கள் கண்ணதாசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். படுகாயம் அடைந்த அவ ரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீ சார் சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்தது
    • காயமடைந்த வாசுதேவனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக சேடை உழும் பணி இன்று நடைபெற்றது. புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன்(வயது53) என்ற கூலி தொழிலாளி, இரண்டு காளை மாடுகளுடன் பலகையை அமைத்து சேடை உழுது கொண்டிருந்தார்.

    இந்த விவசாய நிலத்தின் நடுவே இருந்த இரும்பு மின்சார கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததாம். இதனால் சேடை உழுது கொண்டிருந்த சேறு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் சேற்றில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகின. மின்சாரம் தாக்கியதால் வாசுதேவன் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூக்குரல் இட்டார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரக் கம்பத்துக்கு வரும் மின் இணைப்பை துண்டித்தனர். இதற்குள் வாசுதேவன் மயங்கி சேற்றில் விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் விழாவுக்கு தோரணம் கட்டியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 30) பெயிண்டராக உள்ளார்.

    குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு கோவிலில் விழாவிற்காக தேவன் நண்பர்களுடன் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மின்விளக்குகள் இருந்த ஒயரை எதிர்பாராத விதமாக தேவன் தொட்டு உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எரியப்பட்டார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தேவன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி தேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.
    • மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்விபத்துகளை எப்படி? என்பது குறித்து மின்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மின்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மரக்கிளைகளை அகற்ற...

    *மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி மற்றும் கயிறு, ஆடு, மாடு, போன்ற வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது.

    *மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவேண்டும்.

    *மழைக்காலததில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக மின்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கவேண்டும். (கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1912).

    *இடி, மின்னல் இருக்கும்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும் இத்தகைய மின் சாதனங்களின் இணைப்பு வயரை பிளக்கிலிருந்து அகற்றி வைக்கவேண்டும்.

    பழுதான மின்சாதனங்கள்

    *மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவைக்கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரைக்கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீயணைப்பு துறையின் உதவியை நாடவும்.

    *வீட்டின் சுவர்களில் மின்சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிடவும். அதன்பின் மின்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    *சைக்கிள் செயின், கம்பிகள், பச்சைக்கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின்கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும்.

    சுவிட்சை அணைத்த பிறகு...

    *குளியல் அறையில் ஈரமாக வாய்ப்புள்ள இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. பிளக் சுவிட்சை அணைத்த பிறகே மின்விசிறி, அயன்பாக்ஸ், செல்போன், சார்ஜர் போன்றவற்றை பிளக்கில் இணைக்கவேண்டும்.

    *தரைகளை கழுவும்போது ஈரக்கைகளால் இணைப்பிலிருக்கும் டேபிள்பேன் போன்றவற்றை நகர்த்தக்கூடாது. அவற்றை முன்னதாகவே மின் இணைப்பிலிருந்து அகற்றிவிட வேண்டும்.

    *கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில (எர்த்) இணைப்பு கொடுக்கவேண்டும். மின் சாதனத்துக்கான வயரில் வேறு எந்த மின்சாதனைத்தையும் இணைக்கக்கூடாது. பழுதான சுவிட்ச், பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது அதே அளவு திறன் கொண்ட சாதனங்களையே பொருத்த வேண்டும்.

    வயரிங் வேலைகள்

    *சுவிட்ச் போர்டு, மின்மோட்டார், தண்ணீர் பம்ப் மோட்டார் போன்றவற்றின் மீது தண்ணீர், மழை நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே மின்சார வயரிங் வேலைகளை செய்யவேண்டும். ஈரக்கையால் சுவிட்ச் போடக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.
    • மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    பல்லடம் :

    தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மின்சார விபத்துக்களை தடுப்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.ஜவகர் செய்தியாளரிடம் கூறியதாவது: -

    பொதுமக்கள் இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை பார்த்தால், அவற்றை மிதிக்கவோ,தாண்டவோ செய்யாமல்,அங்கிருந்து உடனடியாக வெளியேறி, மின் வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பிகள், மின் சாதனங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தால், உடனடியாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

    ஈரக்கையாலும், வெறுங்காலுடனும், மின்சாரம் சார்ந்த எதையும் தொடக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள வயர் அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி, துணி காய வைக்கவும், மின்கம்பங்களை, பந்தல்களாகவும், விளம்பர பலகைகள் அமைக்கவும் கூடாது. மின்மாற்றி, மின்கம்பம், மின்பகிர்வு பெட்டி மற்றும் ஸ்டே ஒயர்கள் அருகில், செல்லக்கூடாது. வீடுகளில், குளியலறை மற்றும் கழிப்பறையில், ஈரமான இடங்களில், மின் சுவிட்சுகளை பொருத்த கூடாது.

    இடி, மின்னலின் போது குடிசை வீட்டில், மரத்தின் அடியில், பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் நிற்கக்கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற, வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின் கொண்ட "சாக்கெட்" பிளக்குகள் மூலமாக மட்டுமே, மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் மின் கசிவு தடுப்பான் பொருத்தினால், மின்கசிவால் உண்டாகும் விபத்தை தவிர்க்கலாம். உடைந்துபோன சுவிட்ச் மற்றும் பிளக்குகளை, உடனே மாற்ற வேண்டும். பழுதான மின்சார சாதனங்களை, உபயோகப்படுத்த வேண்டாம்.வீட்டில், எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில், சரியாக பராமரிக்கவும், சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.சுவற்றின் உள்பகுதியில், மின்சாரம் எடுத்துச்செல்லும் ஒயர்களுடன் கூடிய, பி.வி.சி., பைப்புகள், பதிக்கப்பட்டிருந்தால், அப்பகுதிகளில், ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.

    மின்சார தீ விபத்திற்கேற்ற தீயணைப்பான்களை மட்டுமே, மின்சாதனங்களில், தீ விபத்து உண்டாகும் போது பயன்படுத்த வேண்டும்.உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக்கூடாது.மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். மின்கம்பங்கள் சேதம், மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால், 'மின்னகம்' மொபைல் எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
    • திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

    திருப்பூர் :

    பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.

    மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.

    மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.

    இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

    ×