என் மலர்
நீங்கள் தேடியது "New restrictions"
- தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் சட்ட விதிகளின்படி ஓட்டுநர் சீருடை அணிந்தும், உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும், நேம் பேஜ் சட்டையில் பொறுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கட்சி, மதம் சார்ந்த கொடிகளோ அடையாளமோ ஆட்டோவில் இருக்க கூடாது. பயணிகளிடம் கனிவாக நடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் பட்சத்தில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதைப் போன்று ஒலிபெருக்கிகளில் கட்சி பாடல்கள் அதிக அளவில் ஒலி வைத்து ஒலிபரப்பக் கூடாது. அது போன்ற வாடகை டாக்ஸி டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தேவதானப்பட்டி பகுதியில் மொத்தம் 4 ஆட்டோ உரிமையாளர்களின் சங்கம் உள்ளது. அதில் ஒரு சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.
- 100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.
திருப்பூர்,
வேலை உறுதி திட்டத்தில் நடப்பு ஆண்டில்,281 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது. 100 நாள் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை உறுதி திட்ட பணியாளர்எவ்வகையிலும் வரி நிலுவை வைத்திருக்க கூடாது.
நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய உதவி பெறுபவராகவும் இருக்க கூடாது என திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.வரி நிலுவை இருக்க கூடாது என்ற விதிமுறை நியாயமானதாக இருந்தாலும், ஓய்வூதிய உதவி பெறுவோருக்கு பணி வாய்ப்பை மறுக்க கூடாதென ஏழை, எளிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:-
100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.வீட்டுவரி, குடிநீர் கட்டணம் நிலுவை இருக்க கூடாது என்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கி, சம்பளத்திலேயே பிடித்தம் செய்து கட்டலாம்.மாறாக பணி வாய்ப்பை பறிக்க கூடாது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவி பெற்றாலும் 100 நாள் திட்டத்தில் உழைப்புக்கு சம்பளம் பெறும் வாய்ப்பை மறுக்க கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையைப் போக்க மழைக்காலங்களில் விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. அதாவது, வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும், ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. கோவில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.
திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும்போது ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions