search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேலை உறுதி திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளால் கிராமப்புற  பெண்கள் கவலை
    X

    கோப்புபடம்

    வேலை உறுதி திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளால் கிராமப்புற பெண்கள் கவலை

    • நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும்.
    • 100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.

    திருப்பூர்,

    வேலை உறுதி திட்டத்தில் நடப்பு ஆண்டில்,281 ரூபாய் தினக்கூலி வழங்கப்படுகிறது. 100 நாள் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை உறுதி திட்ட பணியாளர்எவ்வகையிலும் வரி நிலுவை வைத்திருக்க கூடாது.

    நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதிய உதவி பெறுபவராகவும் இருக்க கூடாது என திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.வரி நிலுவை இருக்க கூடாது என்ற விதிமுறை நியாயமானதாக இருந்தாலும், ஓய்வூதிய உதவி பெறுவோருக்கு பணி வாய்ப்பை மறுக்க கூடாதென ஏழை, எளிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:-

    100 நாள் திட்டத்தின் மூலமாக, ஆதி திராவிடர் காலனியில் உள்ள ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்.வீட்டுவரி, குடிநீர் கட்டணம் நிலுவை இருக்க கூடாது என்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கி, சம்பளத்திலேயே பிடித்தம் செய்து கட்டலாம்.மாறாக பணி வாய்ப்பை பறிக்க கூடாது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவி பெற்றாலும் 100 நாள் திட்டத்தில் உழைப்புக்கு சம்பளம் பெறும் வாய்ப்பை மறுக்க கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×