search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi League"

    • தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் போட்டி சமனில் முடிந்தது
    • தபாங் டெல்லியை வீழ்த்தியது யு.பி.யோத்தா.

    புனே:

    9-வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புனே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. 


    நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், தபாங் டெல்லி-யு.பி.யோத்தா அணிகள் மோதின. இதில் யு.பி.யோத்தா அணி 50-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 7-வது வெற்றியை பெற்ற யு.பி.யோத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

    • தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
    • இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன.

    புனே:

    புரோ கபடி 'லீக்' போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 35 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் ஆடும்.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-உபி. யோதா மோதுகின்றன. இரு அணிகளும் 7-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    • இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.

    புனே:

    12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 41-32 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-39 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையையும் வீழ்த்தின.

    இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது. குஜராத் ஜெய்ன்ட்ஸ் 31 புள்ளியுடனும், தபாங் டெல்லி 30 புள்ளியுடனும், பெங்கால், வாரியர்ஸ், அரியானா தலா 29 புள்ளியுடனும், உ.பி. யோதா 27 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டனஸ் 8 புள்ளியுடனும் உள்ளன. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா (இரவு 7.30 மணி) டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    • யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.

    பெங்களுரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

    மும்பா அணி 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தபாங் டெல்லி-பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பல்டான்-யு.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.

    புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி, 2 டை பெற்று 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.

    • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
    • 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

    புனே:

    9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 


    இந்த நிலையில் இரவு  8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • தமிழ்தலைவாஸ் முதல் போட்டியில், குஜராத்திடம் டிரா செய்தது.
    • இன்று 3 போட்டிகள் நடக்கிறது.

    புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூரு, புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3 போட்டிகள் நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-யு மும்பா மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் முதல் போட்டியில், குஜராத்திடம் டிரா செய்த நிலையில் 2-வது ஆட்டத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது.

    இன்று வெற்றிக்கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரவு 8.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 9.30 மணிக்கு குஜராத் -புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    • தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார்.
    • நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    பெங்களூர்:

    9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சுடன் மோதுகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார். இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் 200 வீரர்கள் மொத்தம் ரூ.50 கோடிக்கு ஏலம் போனார்கள். #ProKabaddi #Auction
    மும்பை:

    7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டில் மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஏலத்தில் ‘டேக்கிள்’ செய்வதில் சிறந்தவரான நீரஜ் குமார் அதிக விலைக்கு போனார். அவரை வாங்க பெங்கால், குஜராத், அரியானா, பாட்னா, தமிழ் தலைவாஸ் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி வாங்கியது.

    விகாஸ் காலே (அரியானா) ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் (அரியானா) ரூ.33.5 லட்சத்துக்கும், அஜித் (தமிழ் தலைவாஸ்) ரூ.32 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் சி.அருணை ரூ.10 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கியது

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர், மன்ஜீத் சில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகியோர் தக்க வைக்கப்பட்டு இருந்தனர். ஏலத்தின் மூலம் ஹிமான்சு, அபிஷேக், ராகுல் சவுத்ரி, ரன் சிங், மொகித் சில்லார், அஜித், மிலாட் ஷேபக், ஷபீர் பாபு, யஷ்வந்த் பிஸ்னோய், வினித் ஷர்மா ஆகிய வீரர்களை தமிழ் தலைவாஸ் அணி தனதாக்கி உள்ளது. கடந்த 2 நாள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 12 அணிகளும் சேர்ந்து மொத்தம் 200 வீரர்களை (173 பேர் உள்ளூர், 27 பேர் வெளிநாட்டினர்) ரூ.50 கோடிக்கு வாங்கி இருக்கின்றன.
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனார். #ProKabaddi #SiddharthDesai
    மும்பை:

    7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மன்ஜீத் ஷில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகிய 3 வீரர்களை தக்கவைத்து இருந்தது. இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது.

    ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது. நிதின் தோமரை புனேரி பால்டன் அணி இறுதி ‘பிட் மேட்ச் கார்டு’ வாய்ப்பு மூலம் ரூ.1.20 கோடிக்கு தக்க வைத்தது. கடந்த சீசனில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் முன்னணி ரைடராக விளங்கிய மோனு கயாத் ரூ.93 லட்சத்துக்கு உ.பி.யோத்தா அணிக்கு மாறினார்.

    தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரியை ரூ.94 லட்சத்துக்கு தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சந்தீப் நார்வால் ரூ.86 லட்சத்துக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் ஈரானை சேர்ந்த முகமது இஸ்மாயில் அதிகபட்சமாக ரூ.77.75 லட்சத்துக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியால் வசப்படுத்தப்பட்டார். இந்த ஏலம் இன்றும் நடக்கிறது. #ProKabaddi #SiddharthDesai

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    புரோ கபடி லீக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - உ.பி.யோத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-ரிஷாங் தேவாடிகா தலைமையிலான உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் தடம் பதித்த உ.பி.யோத்தா அணி வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, தபாங் டெல்லி ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. இந்த கடைசி தடையை தாண்டினால் உ.பி.யோத்தா அணி இறுதிப்போட்டியை எட்டி விடும். கடைசி 8 ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத அந்த அணி அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர முயற்சிக்கும்.

    குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக் ஆட்டங்களில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்தது. ஆனால் முதலாவது தகுதி சுற்றில் அந்த அணி, பெங்களூரு புல்சிடம் தோல்வி கண்டு தனது முதல் வாய்ப்பை கோட்டை விட்டது. 2-வது தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்தால், வெளியேற வேண்டியது தான் என்பதால் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிக்காக பலமாக மல்லுக்கட்டும். கடைசி ஆட்டத்தில், தற்காப்பு யுக்தியில் சரிவு கண்டதே குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த தவறை சரி செய்து புத்துணர்ச்சியுடன் களம் காணும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி இருந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha 
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்ஸ் சுற்று) முன்னேறின.

    பிளே-ஆப்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. இதில் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) உ.பி. யோத்தா 34 - 29 என்ற புள்ளி கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது.

    இதேபோல் இன்னொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளி கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் வெளியேற்றப்பட்டன.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு கொச்சியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த குஜராத் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    குஜராத் அணியில் சுனில் குமார், அஜய்சமார் பிரபஞ்சன் போன்ற வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளன.

    பெங்களூர் அணியில் கேப்டன் ரோகித்குமார் முதுகெலும்பாக உள்ளார். முதல் தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    தோற்கும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும். அதனால் இன்றைய போட்டியிலேயே வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அணிகளும் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 9 மணிக்கு நடக்கும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. யோத்தா - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
    ×