என் மலர்

  விளையாட்டு

  புரோ கபடி லீக்: 3வது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்
  X

  தமிழ் தலைவாஸ்,டெல்லி அணி வீரர்கள்

  புரோ கபடி லீக்: 3வது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
  • 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

  புனே:

  9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


  இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

  Next Story
  ×