search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Fortunegiant"

    புரோ கபடி லீக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - உ.பி.யோத்தா அணிகள் இன்று மோதுகின்றன. #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-ரிஷாங் தேவாடிகா தலைமையிலான உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் தடம் பதித்த உ.பி.யோத்தா அணி வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் மும்பை, தபாங் டெல்லி ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. இந்த கடைசி தடையை தாண்டினால் உ.பி.யோத்தா அணி இறுதிப்போட்டியை எட்டி விடும். கடைசி 8 ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத அந்த அணி அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் தொடர முயற்சிக்கும்.

    குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக் ஆட்டங்களில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 ‘டை’யுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடம் பிடித்தது. ஆனால் முதலாவது தகுதி சுற்றில் அந்த அணி, பெங்களூரு புல்சிடம் தோல்வி கண்டு தனது முதல் வாய்ப்பை கோட்டை விட்டது. 2-வது தகுதி சுற்றிலும் தோல்வி அடைந்தால், வெளியேற வேண்டியது தான் என்பதால் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிக்காக பலமாக மல்லுக்கட்டும். கடைசி ஆட்டத்தில், தற்காப்பு யுக்தியில் சரிவு கண்டதே குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த தவறை சரி செய்து புத்துணர்ச்சியுடன் களம் காணும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் குஜராத் அணி 37-32 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி இருந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddi #GujaratFortunegiant #UPYoddha 
    ×