search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police raid"

    குளச்சல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களை திருடிய பட்டதாரி வாலிபர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் இரவு வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின. சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதிதெரு ரமே‌ஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது.

    இது குறித்து அவர்கள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குளச்சல் போலீசார் இரும்பிலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகம்மது அனஸ் (22) , அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் 4 பேரும் குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்கு கொண்டு சென்று அவர்கள் பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். இவர்கள் குளச்சல் மட்டுமல்லாமல் தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், கோட்டார் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதானவர்களில் முகம்மது அனஸ் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

    வீரவநல்லூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும், அவசரமாக புறப்பட்டு சென்றனர். போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சா வைத்து இருந்த அரிகேசவநல்லூரை சேர்ந்த தர்மேந்திரா (30), வெள்ளாளங்குழியைச் சேர்ந்த மதியழகன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிக விலைக்கு மதுவிற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 532 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    சாத்தான்குளம்:

    தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் தட்டார்மடம் பகுதிக்குட்பட்ட அழகியவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இடைச்சிவிளையை சேர்ந்த ரவிக்குமார் (21), சார்வின் (34), வேல்முருகன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பதற்காக மது வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 532 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மது பாட்டில்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கனாம் பாளையம் பகுதியில் தேர்தல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மரிமாணிகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த காளியப்பன், கோபி ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணம் வினியோகம் செய்த 3 பேரையும் குறிசிலாபட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி மற்றும் பாரூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற 4 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி  மவாட்டம், போச்சம்பள்ளி மற்றும் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் மணி, ராஜா மற்றும் போலீசார் போச்சம்பள்ளி பஸ்நிலையம், அரசம்பட்டி பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் ரோந்து சென்றனர்.
     
    அப்போது அந்த பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றுகொண்டிருந்த குள்ளம்பட்டி செல்வ குமார்(34), சுரேஷ்குமார்(36), வாடமங்கலம் சக்தி (35), சாம்ராஜ் (35) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.  

    இதில் சக்தி என்பவர் அரசம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டர் மூலம் லாட்டரி சீட்டை பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.21 ஆயிரத்து 670-யை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    அரியமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனுக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மலையப்பநகர் தண்ணீர் தொட்டி அருகில் பெண் ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி உமா மகேஸ்வரி (35) என்பது தெரிய வந்தது. 

    அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.1,060 பணத்தை பறிமுதல் செய்தனர்.
    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சாவுடன் நின்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாட்டப்பத்து பகுதியில் ஒரு பெண்ணும், 2 வாலிபர்களும் சந்தேகப்படும்படி பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை மறித்தனர். அப்போது 2 வாலிபர்களும் பைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

    போலீசார் அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபர்களுடன் வந்த ஆயிரப்பேரியை சேர்ந்த பார்வதி (வயது70). என்ற பெண்ணை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
    பரமத்தி வேலூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் எஸ்.பி. அருளரசுவுக்கு, பரமத்தி வேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி செல்ல முயல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் எஸ்.ஐ.க்கள் கொண்ட குழுவினர் பரமத்திவேலூர் அருகே உள்ள எல்லைமேடு பகுதியில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சங்கர் என்பவரது இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு லாரியில் 5 யூனிட் அளவிலான மணல் சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 

    இதையடுத்து மோகனூர் ராசிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தர்மலிங்கம் (39), நன்செய் இடையாரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கேசவன்(22) மற்றும் ஈரோட்டை சேர்ந்த லாரி கிளீனர் கோபி (35) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் ஒரு லாரி, ஒரு ஜே.சி.பி.வாகனம் உள்ளிட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

    இதில் போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். தொடர்ந்து நன்செய் இடையாறு பகுதியில் அழகுநாச்சியம்மன் கோவில் அருகே சேகர் (45) என்பவரது இடத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்ல முயன்ற ஒரு லாரியை பறிமுதல் செய்து ஏற்கனவே தப்பி ஓடிய 2 பேர் உள்பட 5 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பர்கூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி  மாவட்டம், பர்கூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் பர்கூர் கொங்கன் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடிகொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சந்திரசேகர்(37), கந்திலி சுந்திரவேல் (27), பத்தலப்பள்ளி சிவாஜி(42) இவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.300-யை பறிமுதல் செய்தனர்.
    தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தை தடுக்க பாளை சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நெல்லை:

    பாளை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என்று அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள்.

    அதுபோல இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் நெல்லை மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் சாம்சன் மேற்பார்வையில் பாளை உதவி கமி‌ஷனர் கோடிலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் பாளை மத்திய ஜெயிலுக்குள் சென்றனர்.

    அங்கு அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். கைதிகள் குளிக்கும் பகுதி, மணல் பாங்கான மைதானம் மற்றும் மரங்கள் பகுதியில் சல்லடை போட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மத்திய ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து காலை 7 மணி அளவில் போலீசார் சோதனையை முடித்து கொண்டு திரும்பினர்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



    தருமபுரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய தருமபுரி அடுத்துள்ள கொளகத்தூர் ஏரிகரையில் 3 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். 

    இதனை பார்த்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பழைய தருமபுரியை சேர்ந்த ஆனந்தன், கோபி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சீட்டு கட்டு மற்றும் ரூ.2,520 பறிமுதல் செய்யப்பட்டது.
    தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மற்றும் தனியார் மதுபான பார்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் மதுவிலக்கு சம்பந்தமாக சிறப்பு ரோந்து சென்றதில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றதாக மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 523 மதுபான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூதிப்புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தலைமையில் ரோந்து செய்து வந்த போது ரகசிய தகவலின் பேரில் பூதிப்புரத்தை சேர்ந்த ஆண்டவர் (வயது 50) என்பவரிடமிருந்து 190 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக் கப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×