என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery ticket sale"

    • சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது,
    • லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைதுசெய்தனர்,

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பேருந்து நிலையம், பூதக்கேணி, ஈபி இறக்கம் என பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பவ இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து உள்ளார்கள். விசாரணையில் சிதம்பரம் பாரதிநகர் சி.கொத்தங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (வயது37) , பூதகேணி பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அன்வர்தீன் (63), அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ராமன் மகன் நாகசுந்தரம் (65) ஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மொத்தம் 5 லாட்டரி சீட்டுகள்,2 பில் புக், ரொக்கம் ரூ. 2100 பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டிபோலீஸ்லைன்5 -வது தெருவில் செல்போனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தஒருவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ் பெக்டர்கள் குமார், நந்தகுமார் மற்றும் போலீஸ் காரர்கள் ஞானசேகர், அய்யனார் ஆகியோர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பட்டாணிகளம் ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது.

    அவரது சொந்த ஊர் வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ரவி (வயது 38) என்பதும், இவர் கார் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. ரவியை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.24 ஆயிரத்து 140 மற்றும் செல்போன், லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர். இவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விழுப்புரத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியை சேர்ந்த கார்த்தீபன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தீபனை தேடி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி மற்றும் பாரூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற 4 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி  மவாட்டம், போச்சம்பள்ளி மற்றும் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் மணி, ராஜா மற்றும் போலீசார் போச்சம்பள்ளி பஸ்நிலையம், அரசம்பட்டி பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் ரோந்து சென்றனர்.
     
    அப்போது அந்த பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றுகொண்டிருந்த குள்ளம்பட்டி செல்வ குமார்(34), சுரேஷ்குமார்(36), வாடமங்கலம் சக்தி (35), சாம்ராஜ் (35) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.  

    இதில் சக்தி என்பவர் அரசம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டர் மூலம் லாட்டரி சீட்டை பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.21 ஆயிரத்து 670-யை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் வடசேரியில் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தடையை மீறி லாட்டரிச்சீட்டு விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குமரி மாவட்டம் கேரள மாநிலம் எல்லையில் இருந்து லாட்டரிச்சீட்டுகள் கொண்டு வரப்பட்டு நாகர்கோவில் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. மேலும் ஆன்-லைனிலும் லாட்டரிச் சீட்டு விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை  கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வடசேரி பகுதியில் லாட்டரிச் சீட்டு விற்றதாக போலீசார் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடசேரி பஸ் நிலையம் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது வடசேரி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 60) என்பதும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டை விற்பதும் தெரியவந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். குமரி மாவட்டம் முழுவதும் லாட்டரிச்சீட்டு விற்பவர்களை கண்காணித்து வருகின்றனர். லாட்டரிச்சீட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீ சார் எச்சரித்துள்ளனர்.
    ×