search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police protection"

    • 2 பேர் கொலை வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
    • வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 24 மணிநேர ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் குடைப்பா றைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன்களான தட்சிணா மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2019-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட னர்.

    இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து முருகேஸ்வரிக்கு பாது காப்பாக முத்தழகுபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு(29) என்பவர் இருந்து வந்தார்.

    மிட்டாய் வியாபாரம் செய்து வந்த முருகேஸ்வரி யின் கம்பெனியில் அருளானந்தபாபுவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தல க்குண்டு சாலையில் அருளா னந்தபாபு கடந்த 8-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி, சக்திவேல் ஆகியோரது வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வழங்கப்படஉள்ளது. இதனையடுத்து முருகே ஸ்வரியின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 24 மணிநேர ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

    • வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு
    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடவடிக்கை

    வேலூர்:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு காட்பாடி ெரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் காட்பாடி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.

    • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
    • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

    இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

    வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

    அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது
    • ராட்சத பலூன், ட்ரோன் பறக்க தடை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    அமித்ஷா சென்னையில் இருந்து ெஹலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டம், பொய்கை அடுத்த கந்தனேரியில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

    இதனால் கந்தனேரி மற்றும் பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

    • போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருப்பதற்காகவும் அக்கம், பக்கம் கண்காணிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை ஆவடி சரக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

    இதற்காக போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து சைக்கிளில் சென்று கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதுபோல இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி வருவோர், வெளியூரில் இருந்து வீடு திரும்புவோர்களிடம் சென்று செயின் பறிப்பு திருடர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி வீடுவரை சென்று விட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவடி உதவி கமிஷனர் புருசோத்தமன் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு அருணாச்சல ராஜா மற்றும் போலீசார் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன.
    • வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல்.

    இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.

    சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு 3 மகள்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவர்கள் தங்களின் சொத்துக்கள் அனைத்தும் மகள்களுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.

    இதற்காக கடந்த 8-ந் தேதி மகளிர் தினத்தன்று சிறப்பு திருமண சட்டப்படி மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சுக்கூர்-ஷீனா தம்பதியின் மறுமணம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    பல்வேறு அமைப்பினர் இதற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தனர்.

    செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் காஞ்சாங்காடு போலீசார் சுக்கூர்-ஷீனா தம்பதியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

    மேலும் அவர்களின் வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பது சங்கடமாக இருப்பதாக சுக்கூர்-ஷீனா தம்பதியினர் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் கேள்வி
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    தைப்பூசத்தை முன்னிட்டு இன்று இலவச வேஷ்டி சேலைகளை வழங்க சம்பந்தப்பட்ட விழா ஏற்பாட்டாளர் 2 நாட்களுக்கு உரிய போலீஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தவித போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை.

    இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது எனவும், இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.
    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்..

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது    இதனை அடுத்து நேற்று மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி இரவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

    இந்த மழை கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், முதுநகர், செம்மண்டலம், பாலூர் நடுவீரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் துறைமுக பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டித்து மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடலோரப் பகுதி பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தெரிவிக்க ப்பட்டுள்ளது.   மேலும் கடல் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் துறைமுகப்பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை 31-ம் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீறி சென்றால் அவர்களுக்கு வழங்க ப்படும் மானியமும் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர். தற்போது கடலூர் துறைமுக பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி தீவிரம்
    • ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது

    அரக்கோணம்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வரு கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ளரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையங்களில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டுயாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சலோமோன் ராஜா, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், தாசன் மற்றும் சுமார் 300 போலீசார் துப்பாக் கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

    • கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது.
    • தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.

    சேலம்:

    அனைத்து கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது. தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.

    இதை அடுத்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் கலெக்டர்களுக்கு நேற்று முதல் எஸ்.ஐ தலைமையில் 5 முதல் 7 போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல கலெக்டர்கள் ஆய்வு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றனர். அதில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்ட பெண் கலெக்டர்களுக்கு கொலை மிரட்டல் இருந்தது.

    இதேபோல் சேலம் கலெக்டர் கார்மேகம் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்ட வர்களால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள் அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதனால் கலெக்டரின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதி
    • பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை

    வேலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்றுகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

    கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் பலர் போலீசாரை கண்டதும் உள்ளே செல்லாமல் தானாக திரும்பி சென்றனர்.

    இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனை செய்யபடுகிறது.

    மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை போலீசார்கள் கணேசன், சபரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தங்கும் விடுதியில் உள்ளவர்களின் அடையா ளங்களை சேகரிக்கும் பொருட்டு எப்.ஆர்.எஸ். செயலி மூலம் தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

    ×