திண்டிவனத்தில் வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.
Published on

விழுப்புரம்:

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீ சார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தலைமையிலான சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை போலீசார்கள் கணேசன், சபரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் திண்டிவனத்தில் உள்ள கோவில், சர்ச், மசூதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேக படும் படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் போலீசார் சோதனை செய்தனர். மேலும் தங்கும் விடுதியில் உள்ளவர்களின் அடையா ளங்களை சேகரிக்கும் பொருட்டு எப்.ஆர்.எஸ். செயலி மூலம் தங்கும் விடுதியில் உள்ளவர்களை ஒவ்வொரு வராக போலீசார் சோதனை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com