என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Medis"

    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.

    சிட்னி:

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    • செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன.
    • வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல்.

    இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.

    சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு 3 மகள்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவர்கள் தங்களின் சொத்துக்கள் அனைத்தும் மகள்களுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.

    இதற்காக கடந்த 8-ந் தேதி மகளிர் தினத்தன்று சிறப்பு திருமண சட்டப்படி மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சுக்கூர்-ஷீனா தம்பதியின் மறுமணம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    பல்வேறு அமைப்பினர் இதற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தனர்.

    செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் காஞ்சாங்காடு போலீசார் சுக்கூர்-ஷீனா தம்பதியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

    மேலும் அவர்களின் வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பது சங்கடமாக இருப்பதாக சுக்கூர்-ஷீனா தம்பதியினர் தெரிவித்தனர்.

    ×