என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
- பொதுமக்கள் கேள்வி
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
வாணியம்பாடி:
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று இலவச வேஷ்டி சேலைகளை வழங்க சம்பந்தப்பட்ட விழா ஏற்பாட்டாளர் 2 நாட்களுக்கு உரிய போலீஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தவித போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை.
இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது எனவும், இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






