search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people protest"

    • வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர்.
    • கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் தேங்கும் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு மற்றும் கோவில்களை கட்டியிருந்தனர். இதனை அகற்றுமாறு அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதுப்பணி துறையினர் நீர் நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக போலீசார் உதவியோடு வந்தனர்.

    அப்போது அந்தப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள பட்டாளம்மன் கோவிலினை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட தொடங்கி னர். அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்டகாமல் சுமார் 2 மணநேரத்திற்கும் மேலாக தர்ணா ேபாரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவிலை இடித்தால் இதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று பொதும்ககள் கூறிய தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 மாதங்களுக்குள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை கோவிலை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இதனால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
    • குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

    பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் நிர்வாகம் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

    • பஞ்சமி நிலம் என கூறப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.
    • போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த போராட்டம் கைவிட ப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே வடபுது ப்பட்டியில் பஞ்சமி நிலம் என கூறப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை ெதாடர்ந்து இந்த போராட்டம் கைவிட ப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வட புதுப்பட்டியில் மலைக்கரடு அடிவாரத்தில் உள்ள இடத்தில் கம்புகள், தார்பாய்கள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டது. தாங்கள் பஞ்சமி நிலத்ைத மீட்க வலியுறுத்தி குடிசை அமைத்து அதில் குடியேறும் போராட்டம் நடத்தப்போ வதாக தெரிவித்தனர்.

    இதனைத் ெதாடர்ந்து 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைக்கப்ப ட்டது. சம்பவ இடத்துக்கு தேனி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார், தாசில்தார் ராணி மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீடு இல்லாத மக்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதே இடத்தில்தான் பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளாக பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்த னர். இதனைத் தொடர்ந்து இரவில் அங்கேயே தங்கிய பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். பெண்களை மட்டும் வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆண்கள் அங்கேயே தூங்கினர்.

    மலைப்பகுதி யிலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். வருவா ய்த்துறையினர் மீண்டும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை மலைப்பகுதியை விட்டு கீழே இறங்க மாட்டோம் என்று தெரி வித்தனர். இதனால் இன்று 3வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

    • பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.
    • அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கம்பம்:

    கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டி வடக்கு இந்திரா காலனி பொதுமக்கள் பொது குடிநீர் குழாயை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் பெற வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் அப்பகுதி மக்கள் குடிநீர் குழாய் இணைப்பு பெற ஆர்வம் செலுத்தவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் துண்டித்தது.

    இதனை கண்டித்து ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக பொதுக்குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதே சமயம் பொதுமக்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடி நீர் இணைப்பு பெற வேண்டும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • ஆடலூர்-கே.சி. பட்டி மலைப்பாதையில் சோலைக்காடு பிரிவு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தோட்டத்துக்கு செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

    யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு வருவதில்லை. இந்த நிலையில் சோலைக் நாட்டைச் சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்து வேல், கோபி, பரமேஸ்வரி ஆகியோரது தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை நாசப்படுத்தின.

    மேலும் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகின்றன. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று ஆடலூர்-கே.சி. பட்டி மலைப்பாதையில் சோலைக்காடு பிரிவு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனகாப்பாளர் பீட்டர் ஆகியோர் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அரசு மூலம் நிவாரணம் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

    இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் நகை தனியார் வங்கியில் மறு அடமானம் வைக்கப்பட்டதும், நகை கடன் பெற்ற பலருக்கு முழுமையான தொகை வழங்காமல் இருந்ததும் புகார் எழுந்தது. மேலும் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதனையடுத்து செயலா ளர் மணிவண்ணன், சஸ்பெண்டு செய்யப்ப ட்டார். பின்னர் அவர் தலை மறைவானார். முறைகேடு கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வரவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கூட்டுறவு அலுவலர் செல்வராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. 17 பேர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ.23.72 லட்சம் கடன் வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் விபர ங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

    ஓரிரு நாளில் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த நிலையில் இன்று காலை மீண்டும் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்தனர்.

    ஆனால் அங்கு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் ேசர்ந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் முறைகேடு செய்த செயலாளரை கைது செய்ய வேண்டும்.

    அடகு வைத்த பொதுமக்களின் நகைகளை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு திண்டுக்கல்லில் இருந்து வந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    • இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8வது வார்டு உறுப்பினராக உள்ள சுகன்யா ஜெகதீஸ்.(31) இவர் பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு ஏற்கனவே கோயில் கமிட்டியாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருந்ததாகவும், தற்போது, அவரையும் அவரது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும், அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் கூறுவதாகவும். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில்,நேற்று, பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; பச்சாபாளையம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்றாக போராடி வருகிறோம். இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவிலிக்குள் வரவேண்டாம் என்று சொன்னதாக கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக இங்கே வந்தோம் என்றனர். பின்னர் இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலில் வழிபட யாரையும் தடை செய்யக்கூடாது.

    ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார். இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    • கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை அதிகாரிகளிகள் ஜப்தி செய்தனர்.
    • வீடு எங்களுக்கு சொந்தம் என சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திருச்சியை சேர்ந்தவர் பானு. இவருக்கு சொந்தமான வீடு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தைபேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் பூ வியாபாரி மாரியம்மாள், ரேவதி உள்பட 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். மேலும் அந்த வீட்டை வாங்குவதற்காக குறிப்பிட்ட தொகையை பானுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டை பானு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை வாங்கிய நபர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த மாரியம்மாள் உள்பட குடும்பத்தார் நாங்களும் பணம் கொடுத்துள்ளோம். எனவே வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறினர். மேலும் அவ்வழியாக ெசன்ற பஸ்சை மறித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • சின்னசேலம் பிளஸ்-2 மாணவி சாவு எதிரொலியாக வேப்பூர் அருகே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் வசிக்கும் ராமலிங்கம் செல்வி மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதன் எதிரொலியாக இன்று வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலையாத பொதுமக்கள் போராட்டத்தை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றனர்.

    • வாய்க்கால் பணியின்போது குடிநீர் தொட்டியின் பைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • 2 நாட்களுக்குள் இந்த பிரச்சினை தீராவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித் துள்ளனர்.

    குள்ளனபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை அடுத்த செடிப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

    மேலும் இப்பகுதியில் உள்ள குளத்திற்கு சிறுமலையில் மழை பெய்யும் பொழுது தண்ணீர் வருவதற்காக வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் இதனையொட்டி உள்ள இடத்தை ஆக்கிரமித்தனர். மேலும் வரத்து வாய்க்காலை குளத்தில் தண்ணீர் செல்ல விடாமல் அடைத்தனர்.

    இந்த பணியின்போது குடிநீர் தொட்டியின் பைப்புகள் சேதப்படுத்தப்ப–ட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. எனவே ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். மேலும் இது குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் ெதரிவித்தனர். இன்னும் 2 நாட்களுக்குள் இந்த பிரச்சினை தீராவிட்டால் சாலை மறியலில் ஈடுபட–போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கிராம நிர்வாக அலுவலரை மாற்ற கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் சான்று வழங்க 20 நாட்கள் வரை காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்து வந்தது.

    மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு அதே அலுவலகத்தில் 4 இடைத் தரகர்களை நியமித்துள்ளதாகவும், அவர்கள் மூலமாக பணத்தை பெற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் அந்த சான்றிதழை வழங்க கையொப்பமிடுவ தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    எனவே நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கேஸ்வரியி டம் இது குறித்து புகாரளித்த னர். சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக மாறுதல் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கிராமங்கள் முழுவதும் போஸ்டர் ஒட்டி பஸ் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    மேலும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகை யிட்டு பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர். ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • டயர்கள் எரிப்பதால் கிளம்பும் புகையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு டயர்களை எரிப்பதால் நச்சுப்புகை வெளியாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இதன் காரணமாக ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென்று அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டம் செய்தனர்.

    அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×