search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    பல்லடம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8வது வார்டு உறுப்பினராக உள்ள சுகன்யா ஜெகதீஸ்.(31) இவர் பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு ஏற்கனவே கோயில் கமிட்டியாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருந்ததாகவும், தற்போது, அவரையும் அவரது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும், அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் கூறுவதாகவும். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில்,நேற்று, பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; பச்சாபாளையம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்றாக போராடி வருகிறோம். இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவிலிக்குள் வரவேண்டாம் என்று சொன்னதாக கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக இங்கே வந்தோம் என்றனர். பின்னர் இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலில் வழிபட யாரையும் தடை செய்யக்கூடாது.

    ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார். இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×