search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people death"

    கோவை புறநகரில் நடந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 47). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது லோடு ஆட்டோவில் சகோதரர்களான செல்வம் (46), சேகர் (45) ஆகியோருடன் கோவை-பாலக்காடு ரோட்டில் சென்றார். வாளையாறு சோதனை சாவடி அருகே லோடு ஆட்டோ சென்ற போது அங்கு ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் லோடு ஆட்டோவில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே டிரைவர் பாபு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் சின்னாம்பட்டியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவரது மகன் மோகன் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகமநாயக்கன் பாளையம்- பீடம்பள்ளி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மோகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனத்தாய். சம்பவத்தன்று வனத்தாய் தனது மகன் தமிழ் அழகனுடன் (வயது5) அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தமிழ்அழகன் படுகாயம் அடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்அழகன் பரிதாபமாக பலியானார்.

    ஆண்டிப்பட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ் (57). தனது நண்பர் சவுந்தரராஜனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கந்துவாரன் பட்டிவிலக்கு பகுதியில் சென்றபோது சாலையில் இருந்து தடுப்பு மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தைராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சவுந்தரராஜன் படுகாயம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முள்ளோடையில் சாலையை கடக்க முயன்றவர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் உடல் சிதைந்து பலியானார்.

    பாகூர்:

    கன்னியகோவில் அருகே முள்ளோடையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் எதிரே இன்று அதிகாலை 5 மணியளவில் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் புதுவை- கடலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் மீது அடுத்தடுத்து வந்த வாகனங்களும் மோதின. இதில் முகமே அடையாளம் தெரியாத வகையில் அவர் உடல் சிதறி போனது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிதறி கிடந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாகனங்கள் மோதி இறந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, போலீசாருக்கு கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    போளூர் அருகே கார், லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

    போளூர்:

    வேலூர் பாகாயத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், காரில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எட்டிவாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே இன்று காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, குடியாத்தம் சந்தப்பேட்டையில் இருந்து வந்த லோடு ஆட்டோவும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரும், ஆட்டோவும் நசுங்கி உருகுலைந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் இருந்த வைஷ்ணவி (வயது 13) என்ற சிறுமி மற்றும் ஆட்டோவில் இருந்த ரவி (52) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் இருந்த வெங்கடேசன், லட்சுமி, ராஜ் குமார், நவீன், அனு, துளசி, கருணாஸ், பரத், சீனு, அருண் மற்றும் ஆட்டோ டிரைவர் என 11 பேர் படுகாயமடைந்தனர்.

    களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்த 11 பேரும் போளூர் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலியாகினர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பண்ணைக்காடு பகுதியிலும் நேற்று பெய்த கன மழையால் மூலையாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    பண்ணைக்காட்டைச் சேர்ந்த ஜெயலெட்சுமி (வயது 55), திவ்யா (20), பாண்டிச்செல்வி (14), விஜயராகவன் (28), சரவணன் (40), முருகவேல் (45). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தாழோடை பகுதியில் தோட்ட வேலைக்கு சென்றனர்.

    மாலை நேரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருந்த போதும் எப்படியாவது வீடு திரும்பி விட வேண்டும் என்பதற்காக 6 பேரும் ஆற்றை கடக்க முயன்றனர். அப்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய 6 பேரும் அபயகுரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். அவர்களும் ஆற்றில் இறங்கினர். இதன் விளைவாக விஜயராகவன், பாண்டிச் செல்வி, சரவணன், முருகவேல் ஆகிய 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    மேலும் ஜெயலெட்சுமி, திவ்யா ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்க முடியாததால் வனத் துறையினர் மற்றும் கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 500 மீட்டர் தூரத்தில் ஜெயலெட்சுமி பிணமாக மீட்கப்பட்டார். இன்னும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டிருந்தால் மலையில் இருந்து கீழே விழுந்து உடல் சிதையும் நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் உடலும் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட திவ்யா உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அவரது உடலை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தொடர் மழை காரணமாக நேற்று இரவு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவை தேடும் வேட்டையில் வனத்துறை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    ×