search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan PM"

    20 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி திரட்ட அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
    அபுதாபி:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

    உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

    பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

    இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த வாரம் மலேசியாவுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  சென்றுள்ளார்.

    அவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரைஷி, நிதி மந்திரி அஸாத் உமர் ஆகியோரும் சென்றுள்ளனர்.

    அபுதாபி நகரில் உள்ள அதிபர் மாளிகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும் அந்நாட்டின் முப்படைகளின் துணை தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சயித்-ஐ இன்று அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #PakistanPM #Imrankhan
    ரியாத்:

    சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை பேண எனது கையை நீட்ட முயற்சித்தேன். அது மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. எனவே இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறோம்.

    எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கருதுகிறேன் என்றார்.

    ஐ.நா. சபை கூட்டத்தின் போது இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேசுவது என கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இதை தான் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். #PakistanPM #Imrankhan
    பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். #ImranKhan #ImranKhanChinavisit
    இஸ்லாமாபாத்:

    வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

    பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.

    தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். சினா-பாகிஸ்தான் இடையிலான ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இந்த பயணத்தின்போது சீன அதிபர் க்சி கின்பிங் உடன் இம்ரான் கான் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியை நவம்பர் 5-ம் தேதி இம்ரான் கான் பார்வையிடுவார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #ImranKhan  #ImranKhanChinavisit
    ஷாபாஸ் ஷரிப் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்று நவாஸ் ஷரிப் குற்றம்சாட்டியுள்ளார். #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் தம்பி ஷாபாஸ் ஷரிப். இவர் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஆக இருந்தார். நவாஸ் ஷரிப் சிறை தண்டனை பெற்றபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    இவர் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த போது வீட்டு வசதி வாரிய ஊழலில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே ஜாமீனில் விடுதலை ஆன நவாஸ் ஷரிப் தனது கட்சியின் மத்திய செயலாக்க கமிட்டியின் அவசர கூட்டத்தை லாகூரில் கூட்டினார், அப்போது பேசிய அவர் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் ஷாபாஸ் ஷரிப் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.


    மேலும் பேசிய அவர் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சியினரை சந்தித்து இம்ரான்கானின் அடக்கு முறை நடவடிக்கையை எடுத்துரைக்க வேண்டும். அதற்கு எதிராக போராட அவர்களையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தமது பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஷாபாஸ் ஷரிப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    குரங்கு பஸ்சை ஓட்டுவது போல் வெளியான வீடியோ காட்சியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் ஒப்பிட்டு எதிர்கட்சி தலைவர் மவுலானா பவுஸ்லூர் ரஹ்மான் கிண்டல் செய்துள்ளார். #Imrankhan
    பெங்களூர்:

    கர்நாடகாவில் அரசு பஸ் டிரைவர் ஒருவர் தான் வளர்க்கும் குரங்கை ஸ்டேரிங்கில் வைத்து பஸ்சை இயக்கிய வீடியோ சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியானது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பாகிஸ்தானின் ஜமித் உலமா-இ- இஸ்லாம் கட்சி தலைவர் மவுலானா பவுஸ்லூர் ரஹ்மான், அந்த குரங்குடன் பாகிஸ்தான் பரதமர் இம்ரான்கானை மறைமுகமாக ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, நான் சமீபத்தில் பார்த்த வீடியோ பஸ் டிரைவர் ஒருவர் குரங்கை ஸ்டெரிங்கில் வைத்து பஸ்சை ஒட்டி செல்கிறார்.


    அந்த குரங்கு தான் பஸ்சை ஓட்டுவதாக நினைத்து கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே பஸ்சை ஓட்டுவது டிரைவர்தான் இந்த வீடியோவை உங்களில் பலர் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

    பிரதமர் இம்ரான்கானை ராணுவம் பின்னால் இயக்குவதை சுட்டிக்காட்டி மறைமுகமாக மவுலானா, ரஹ்மான் சாடியுள்ளார். #Imrankhan

    பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தைப் போன்று தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று தொடங்கி வைக்கிறார். #ImranKhan #CleanlinessDrive
    இஸ்லாமாபாத்:

    ‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை அவர் இணைத்துள்ளார்.



    அதேவகையில், பாகிஸ்தானிலும்  தூய்மையான பாகிஸ்தான் மற்றும் பசுமையான பாகிஸ்தான் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, பாகிஸ்தான் நாட்டிலுள்ள 4 மாகாணங்களை சேர்ந்த முக்கிய பெருநகரங்களில் பிரதமர் இம்ரான் கான் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வானொலி தெரிவித்துள்ளது. #Pakistancleanlinessdrive #ImranKhaninaugurate 
    பாகிஸ்தானில் பிரதமர் மாளிகையில் நவாஸ் ஷெரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் ரூ.23 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பிறகு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது.

    மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள், புல்லட் புரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மாளிகையில் உள்ள 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று இஸ்லாமாபாத்தில் அவை ஏலம் விடப்பட்டன. அவை 23 லட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின. அவற்றை முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் ஆதரவாளர்கள் வாங்கினர்.

    8 எருமைகளில் ஒன்று நவாஸ் செரீப்பின் ஆதரவாளர் குயால்ப் அலி ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்துக்கு வாங்கினார்.

    ஆனால் அதன் உண்மையான விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும். 2 எருமைகள் மற்றும் 4 கன்றுகளை நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் பாக்கர் வாரிக் எனபவர் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு வாங்கினார். மற்றொரு கன்று ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

    இந்த எருமை மாடுகள் அனைத்தும் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது வாங்கப்பட்டது. எனவே அவரது ஆதரவாளர்கள் இதை விரும்பி ஏலத்தில் எடுத்துள்ளனர். #PakistanPM #ImranKhan
    முந்தைய ஆட்சி வைத்து சென்ற கடன் சுமையினால் பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாத அளவுக்கு கஜானா காலியாக கிடப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Nomoney #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

    வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நம்மால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்லாமாபாத் நகரில் உயரதிகாரிகளிடையே பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் கடன் சுமையில் மூழ்கி கிடப்பதாக தெரிவித்தார். நமது அரசியல்வாதிகள் மாற வேண்டும். அதிகாரிகள் மற்றும் மக்களின் மனப்போக்கும் மாற வேண்டும். மிக இக்கட்டான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நாம் இனியும் மாறாமல் போனால் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

    சமீபத்தில் தனக்கு தெரிவிக்கப்பட்ட நாட்டின் நிதி நிலவரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

    நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறிய அவர், இவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் வேலை தேடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார். #Nomoney #ImranKhan
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இன்று சீனா வெளியுறத்துறை மந்திரியும், சவுதி அரேபியா நாட்டு கலாசாரத்துறை மந்திரியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Saudiminister #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், இஸ்லாமாபாத் நகரில் இன்று சவுதி அரேபியா நாட்டு தகவல் தொடர்பு மற்றும் கலாசாரத்துறை மந்திரி அவ்வாட் பின் சாலே அல்-அவ்வாட் இன்று இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என அந்நாட்டு மன்னர் முஹம்மது பின் சல்மான் உறுதியளித்துள்ளதாக இம்ரான் கானிடம் தெரிவித்த  அவ்வாட் பின் சாலே, சவுதி அரேபியாவுக்கு வருமாறு மன்னர் அனுப்பிய அழைப்பையும் அளித்தார்.

    பின்னர், பாகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனா வெளியுறத்துறை மந்திரி வாங் இ இம்ரான் கானை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்புகளின்போது பாகிஸ்தான் வெளியுறத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாட் சவுத்ரி ஆகியோரும் உடனிருந்தனர். #Saudiminister #ImranKhan
    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க பஞ்சாப் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்க உள்ளார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார். 
     
    இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 
    ×