search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பி ஷாபாஸ் ஷரிப் கைது- இம்ரான்கான் மீது நவாஸ் ஷரிப் குற்றச்சாட்டு
    X

    தம்பி ஷாபாஸ் ஷரிப் கைது- இம்ரான்கான் மீது நவாஸ் ஷரிப் குற்றச்சாட்டு

    ஷாபாஸ் ஷரிப் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்று நவாஸ் ஷரிப் குற்றம்சாட்டியுள்ளார். #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் தம்பி ஷாபாஸ் ஷரிப். இவர் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஆக இருந்தார். நவாஸ் ஷரிப் சிறை தண்டனை பெற்றபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    இவர் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த போது வீட்டு வசதி வாரிய ஊழலில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே ஜாமீனில் விடுதலை ஆன நவாஸ் ஷரிப் தனது கட்சியின் மத்திய செயலாக்க கமிட்டியின் அவசர கூட்டத்தை லாகூரில் கூட்டினார், அப்போது பேசிய அவர் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் ஷாபாஸ் ஷரிப் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.


    மேலும் பேசிய அவர் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சியினரை சந்தித்து இம்ரான்கானின் அடக்கு முறை நடவடிக்கையை எடுத்துரைக்க வேண்டும். அதற்கு எதிராக போராட அவர்களையும் அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தமது பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஷாபாஸ் ஷரிப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  #Imrankhan #NawazSharif #ShehbazSharif
    Next Story
    ×