search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one day match"

    வங்காளதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம் அணி. #PAKWvBANW
    பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
    அதனால் பாகிஸ்தான் மகளிர் அணியினர் 34.5 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகமாக கேப்டன் ஜவேரியா கான் 29 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் அணி சார்பில் கதிஜா துல் குப்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 95 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடியது. பர்கனா ஹக் 48 ரன்களும், ருமானா அகமது 34 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காளதேசம் அணியினர் 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருது பெற்றார். #PAKWvBANW
    உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார். #AustraliaCricket #DArcyShort #WAvQL
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

    கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை அணி. #SAvSL
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-0 என முன்னிலைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    டிக்வெலா 34 ரன்களும், தரங்கா 36 ரன்களும், குசால் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய குசால் பெராரா அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    திசாரா பெராராவும், டாசன் ஷனகாவும் அதிரடியாக ஆட இலங்கை அணி 300 ரன்களை கடந்தது. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தனர்.

    ஷனகா 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். திசாரா பெராரா 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி, டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. ஆனால் இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா 40 ரன்களும், டுமினி 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டும், திசாரா பெராரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டாசன் ஷனகாவுக்கு வழங்கப்பட்டது. #SAvSL
    பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை இன்று படைத்துள்ளார். #FakharZaman
    புலவாயோ:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி இன்று புலவாயோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக இமால் உல் ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர். இதுவரை பகர் சமான் 17 இன்னிங்ஸ்களில் ஆடி 980 ரன்களை எடுத்திருந்தார்.

    இன்று நடைபெற்ற போட்டியில் அவர் 20 ரன்களை கடந்த போது, குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். 

    இவருக்கு அடுத்தபடியாக விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜோனாதன் ட்ராட், குயிண்டான் ட் காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரன் ரன்களை கடந்துள்ளனர்.

    குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த பகர் சமானுக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FakharZaman
    ×