search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man died"

    • பைக்கில் சென்ற போது மழை நீரில் எதிர்பாராதவிதமாக தடுமாறி முதியவர் கீழே விழுந்தார்.
    • மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி:

    போடி பத்ரகாளியம்மன் கோவில் ெதருவை சேர்ந்தவர் உதயசூரியன்(50). இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது மழை நீரில் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழேவிழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • களக்காட்டில் இருந்து முதியவர் மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்காக பாய்ந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    நெல்லை:

    நாங்குநேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் அதிசயமுத்துராஜ்(வயது 75). இவர் சம்பவத்தன்று களக்காட்டில் இருந்து மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்காக பாய்ந்தது.

    இதில் மொபட்டில் இருந்து அதிசய முத்துராஜ் தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு நடந்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.
    • மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன்(வயது 80). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மீரான் மைதீன் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மீரான் மைதீன் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

    • பார்வை தெரியாத முதியவர் தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரெயில் மோதி பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள குல்லலக்குண்டு சாண்டலபுரத்தை சேர்ந்தவர் நாச்சான் (வயது72). இவர் தனது மனைவி பொன்ராக்கு (67), மகன் பாலமுருகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இவருக்கு சரியாக கண் பார்வை ெதரியாது.

    தனது தோட்டத்தில் இருந்து அருகில் உள்ள கொைடரோடு மற்றும் வாடிப்பட்டி ரெயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கொடைரோடு ரெயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நாச்சான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். படுகாயமடைந்த தம்பதி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இதுகுறித்து சத்திர ப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்த இருளப்பன் (வயது 60). இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிந்தலவாடம் பட்டி அருகே ெசன்றபோது அவ்வழியாக வந்த தனியார் பஸ் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருளப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தூக்கி வீசப்பட்டதில் பஸ் நிறுத்தத்தில் இருந்த மயிலான் (65), அவரது மனைவி அருக்காணி (60) ஆகியோர் மீது விழுந்தார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்று விட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மயிலான் மற்றும் அருக்காணியை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சத்திர ப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் குடும்ப பிரச்சினை அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    • அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(60).

    இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்தார். அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று குடிபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருந்தபோதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கடையூரில் லாரி மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருக்கடையூர்:

    நாகை மாவட்டம், திருக்கடையூர் அபிஷேகக்கட்டளை காலனித்தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 63). இவர், நேற்று காலை டீ குடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து திருக்கடையூர் கடைத்தெருவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது தரங்கம்பாடி நோக்கி ஜல்லி லோடு ஏற்றி சென்ற ஒரு லாரி திடீரென தனபால் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வெம்பாக்கம் அருகே உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த தூசி 3 கண் பாலம் அருகில் இன்று காலை முகத்தில் பலத்த காயங்களுடனும், உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் உதவியாளர் சேகர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு பிணம் வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×