search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே தனியார் பஸ் மோதி  முதியவர் பலி தம்பதி படுகாயம்
    X

    கோப்பு படம்

    பழனி அருகே தனியார் பஸ் மோதி முதியவர் பலி தம்பதி படுகாயம்

    • பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். படுகாயமடைந்த தம்பதி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இதுகுறித்து சத்திர ப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்த இருளப்பன் (வயது 60). இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிந்தலவாடம் பட்டி அருகே ெசன்றபோது அவ்வழியாக வந்த தனியார் பஸ் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருளப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தூக்கி வீசப்பட்டதில் பஸ் நிறுத்தத்தில் இருந்த மயிலான் (65), அவரது மனைவி அருக்காணி (60) ஆகியோர் மீது விழுந்தார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்று விட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மயிலான் மற்றும் அருக்காணியை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சத்திர ப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×