என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே பைக்கில் தவறிவிழுந்து முதியவர் பலி
- பைக்கில் சென்ற போது மழை நீரில் எதிர்பாராதவிதமாக தடுமாறி முதியவர் கீழே விழுந்தார்.
- மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி:
போடி பத்ரகாளியம்மன் கோவில் ெதருவை சேர்ந்தவர் உதயசூரியன்(50). இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மழை நீரில் எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழேவிழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story