search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new year celebration"

    • மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
    • திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மது பிரியர்கள் அதிகம். பண்டிகை காலங்களில் இங்கு மது விற்பனை அமோகமாக இருக்கும்.

    குறிப்பாக ஓணப்பண்டிகையின் போது இங்கு அதிக அளவில் மது விற்பனை நடைபெறும். தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களிலும் மது விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த புத்தாண்டு தினத்திலும் கேரளா முழுவதும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    கேரளாவில் மதுபான விற்பனை அரசின் பெவ்கோ நிறுவனம் மூலம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பெவ்கோ சார்பில் 266 கடைகள் உள்ளன.

    இந்த கடைகள் மூலம் நேற்று முன்தினம் 31-ந்தேதி மட்டும் சுமார் ரூ.107 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

    மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

    இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த ஆண்டு கள்ளச்சந்தையில் மது விற்பனையை அரசு கண்காணித்து தடை செய்தது. இதன்காரணமாகவே அரசு கடைகளில் மதுவிற்பனை அதிகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுமார் ரூ.690 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அளவுக்கு வரிவருவாய் கிடைக்கும், என்றனர்.

    • கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு பிறக்கும் உற்சாகத்தில் நள்ளிரவில் மது போதையில் இளைஞர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளில் நகர சாலைகளில் வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.

    இந்த நிலையில் கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    அந்த வகையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 8 பேரும் சிகிச்சை பெற்றனர். இதை தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பலர் சிகிச்சை பெற்றனர்.

    புதுவையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தி, ஒலி பெருக்கி அமைத்து, போக்குவரத்து போலீசார் இருந்த இடத்தில் இருந்த படியே அனைத்து சந்திப்புகளையும் கண்காணிக்க முடியும்.

    சிறிய மாநிலமான புதுவையில் இவற்றுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏனோ அவை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    • புத்தாண்டை ஒட்டி நடந்தது
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    புத்தாண்டை ஒட்டி திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இரவு முதல் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணி வரை ஆட்டம் பாட்டம் என நடைபெற்றது.

    திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2-ல் ஆங்கில புத்தாண்டு 2023 வெல்கம் ஸ்ட்ரீட்ஸ் பொதுமக்கள் சார்பில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 32-வது வார்டு கவுன்சிலர் செல்வி, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி ராமச்சந்திரன், ஜி.சுந்தரமூர்த்தி, வி. ஜி. ஆர். ராஜன், அருண் குமார் நசிருல்லா, மற்றும் இளைஞர் அணியினர் பரிசுகளை வழங்கினார்கள்.

    • திருப்பத்தூரில் ரோந்து சென்ற போது புத்தாண்டு கொண்டாட்டம்
    • பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்த வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பின்னர் ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு குறித்து ரோந்து சென்ற போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பொதுமக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளோடு ஜித்து ஜில்லாடி பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதனால் அப்பகுதி மக்கள் அவருடன் செல்பி எடுத்தும் கைகுலுக்கி பாராட்டி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில்:-

    எனது முகாம் அலுவலகத்தில் இருந்து நான் புறப்பட்ட போது எந்த நாட்டில் இருக்கிறோம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இல்லையே என்று நினைத்தேன் இங்கு பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சி பொங்கியது.

    இதே போல் அனைவரும் அனைத்து விழாக்களும் செய்யவேண்டும். பாதுகாப்புக்காக சி.சி.டி.வி பொறுத்த வேண்டும் என்றார்.

    • ரூ.50 ஆயிரம் வசூல்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடக்கூடாது. மது விருந்து கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை போதையில் ஓட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    புத்தாண்டையொட்டி நேற்று இரவு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 58 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

    பள்ளிகொண்டா சுங்கசாவடியில் வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்ததாக 50 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். ரூ.50 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • மதுபானங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன
    • இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கே இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, 'கேக்' வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மதுபான பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுபானத்தைக் குடித்து உற்சாகமாக காணப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. வேலூர் நிர்வாக மாவட்டத்தில் உள்ள வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 123 கடைகள் உள்ளன.

    டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு தினத்தின்போது மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வகையான ரம், விஸ்கி, பிராந்தி போன்ற 'ஹாட்' வகைகளும், பீர் வகைகளும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

    மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் மது விற்பனை களை கட்டியது. வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகளவில் பீர் மற்றும் ஹார்ட் வகைகள் விற்பனையானது.

    நேற்று ஒரே நாளில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4.28 கொடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    ராணிப்பேட்டையில் ரூ.2.76 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    • குடியாத்தத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. செல்போன்களில் வாட்ஸ் அப் பேஸ்புக் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    வேலூர் பழைய பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே காவல்துறை சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக்குகளை வெட்டினர்.

    மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பொதுமக்களும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாருக்கு வாழ்த்துக்களை கூறினர். பொதுமக்கள் பலர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்த புத்தாண்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டினார்.

    டி.எஸ்.பி. பழனி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது இதில் போலீஸ் பிரிண்டர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது இரவு பகல் பாராமல் பணியாற்றும் போலீசாருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் ஆண்டில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், டி.எஸ்.பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கவுன்சிலர் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
    • இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    அப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் அவர் கேக்வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சத்தியராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம்,போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ், நாகராஜன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.

    • கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது.
    • விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மழலையர் பிரிவு தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சாலையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றால் அதனை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    • மட்டக்கடை பகுதியில் அதிவேகமாக சென்ற 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    புத்தாண்டை முன்னிட்டு நேற்று நள்ளிரவு சாலையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றால் அதனை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அதன்படி வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின்ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன், தனிப்பிரிவு காவலர் அருணாச்சலம் ஆகியோர் மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு அப்பகுதியில் சிலர் விதிமுறைகளை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். மட்டக்கடை பகுதியில் அதிவேகமாக சென்ற 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார்.
    • உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    விழுப்புரம்:

    சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தியை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் புத்தாண்டு கொண்டாடு வதற்காக குடும்பத்துடன் ஆரோவில் வந்தார். அப்போது வானூர் அருகே பூத்துறையில் விடுதி எடுத்து தங்கினார். நேற்று தனது குடும்பதினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு விடுதியின் மாடிக்கு சென்றார். அப்போது பரந்தாமணின் மகள் சஹானா (வயது 6). திடீரென மாயமானாள்.

    அதிர்ச்சியடைந்த பரந்தா மன் தனது மகளை விடுதி யில் தேடினார். அப்போது அவரது மகள் சஹானா அங்குள்ள நீச்சல் குளத்தில் மிதந்தார். பதறிபோன அவர் உடனடியாக சஹானாைவ தூக்கிக்கொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சஹானா இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×