search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நள்ளிரவில் களை கட்டிய"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    ×