search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimha"

    குடவரை ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சனந்தர்களும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும், அடுத்து வலது புறம் ஈஸ்வரரும், இடது புறம் நான்முகனும் (பிரம்மா) பகவான் இரணியனை வதைத்த உக்ரம் தணிவதற்கு வழிபடுகிறார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமியின் தவத்தினால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் மூவரும் ஒரே ஆலயத்தில் பூஜிக்கப்படுவதால் திருமூர்த்தித் தலம் எனும் புகழுடையது. இவ்வூரில் தனிப்பட்ட சிவ ஆலயம் என்று ஏதொன்றும் கிடையாது.
    பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையில் இரணிய சம்ஹாரம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் காணலாம் என்பர்.

    கர்ப்பக்கிரகம் (கருவறை, அர்த்தமண்டபம் இவை குடவரையில் அமைந்துள்ளது) இத்திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மரின் பெருமை கூறவொண்ணாதது.

    இந்த கோவிலின் கருவறை குடவரையில் பக்கங்களில் ஸ்ரீவைகுண்ட நாதர், ஹிரண்யசம்ஹார நரசிம்மர் (உக்ரநரசிம்மர்), மறுபுறம் வாமனமூர்த்தி, உலகளந்தப் பெருமாள், வராஹமூர்த்தி முதலிய மூர்த்திகள் வெகு அழகாக சிற்பவடிவில் காட்சி கொடுக்கின்றனர். குடவரை வெகு அழகாகவும், நல்ல வேலைப்பாடுகளும், ஆறுகம்பங்களும், மேலே கொடுங்கை முதலியனவைகளுடன் அமையப் பெற்றிருக்கிறது. இக்குடவரையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கு முக்காலங்களிலும் பூஜை நடந்து வருகிறது.

    இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
    நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தடைகள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்.
    நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

    “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து
    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்
    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே”
    ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்று கிழமை)நடக்கிறது.
    ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் சிங்கிரி கோவிலுக்கு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி (ஞாயிற்று கிழமை)நடக்கிறது. இது குறித்து புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிங்கிரி கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 23-வது ஆண்டு புனித பாதயாத்திரை வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பாதயாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைக்கிறார். இதில் திவ்யநாமபஜனை, பிருந்தாவன பஜனைகள் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெறும்

    இந்த பாதயாத்திரை புதுவை-கடலூர் சாலை வழியாக அபிஷேகப்பாக்கம் சிங்கிரி கோவிலில் நிறைவு பெறும். புனித பாதயாத்திரையையொட்டி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழாவையொட்டி 5-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண நிலையத்தில் திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.


    மிக்கானை மறையாய் விரிந்த விளக்க என்னுள்
    புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
    தக்கானைக் கடிகைத்தடங் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து ய்ந்து போனேனே!

    -- திருமங்கையாழ்வார்

    கார்த்திகை பிறந்து விட்டாலே அய்யப்ப சரண கோஷமும், தீப திருவிழா கோலாகலமும் நிறைந்து இருக்கும். இத்தகைய சிறப்பான கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதமும் நிகழ்கிறது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மட்டுமே இந்த “கண் திறப்பு” நடக்கிறது.

    நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் அற்புதத்தை நேரில் கண்டு, பலன் பெற விரும்பும் பக்தர்கள் செல்ல வேண்டிய இடம் சோளிங்கர். இங்கு யோக நிலையில் இருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் அந்த யோகத்தை கைவிட்டு, பக்தர்களை கண் திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார்.

    எனவே சோளிங்கர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை கார்த்திகை மாதத்தில் என்றாவது ஒருநாள் சென்று வழிபட்டால் அரிய பலன்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலில் சோளிங்கர் திருத்தலம் பற்றிய சிறப்புகளை காணலாம்....

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.  எந்த நூற்றாண்டில் இந்த தலமும், கோவிலும் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை என்றாலும் 6-வது நூற்றாண்டில் ஏற்பட்டதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் கருதப்படுகிறது.

    சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள். சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. சென்றால் பெரியமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீயோக நரசிம்மர் வீற்றிருக்கும் மலை அடிவாரத்தை நாம் அடையலாம். இங்குள்ள நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ‘கடிகாசலம்‘ என்னும் பெயரும் உண்டு. அதாவது ‘கடிகா+அசலம்‘ என்று பொருள்படும்.

    ‘கடிகா’ என்றால் ஒரு கால அளவு அல்லது நாழிகை என்று அர்த்தம். ‘அசலம்’ என்றால் மலை என்று பொருள். வாமதேவர், பிரகலாதன், சப்தரிஷிகள் ஆகியோர் நினைத்தவுடன் யோக நரசிம்மர் இம்மலையில் நாழிகைப் பொழுதில் காட்சி அளித்து அவர்களை ஆட்கொண்டார். மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, பய பக்தியுடன் நமஸ்காரம் செய்து எங்களை நல்லபடி ஏற்றி விட வேண்டும் என வேண்டிக் கொண்டு முதலில் பெரிய மலையில் ஏறத் தொடங்க வேண்டும். பெரிய மலை திரும்பிய திசையெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது.

    நாம் பெரிய மலையில் ஏறி சன்னிதானத்தை அடையும் வரை வழியில் ஸ்ரீராமபிரானுக்கு உதவி செய்த குரங்கு கூட்டங்கள் நம்மை முன்னும் பின்னும் தொடர்ந்து வரும். கையில் பை, கேரி பேக் எடுத்துச் செல்ல முடியாது. பழ வகைகள் போன்றவை இருக்கும் என்று நினைத்து குரங்குகள் அவற்றை பிடுங்கிக் கொள்ளும். எனவே கவனமாக செல்ல வேண்டும்.

    1305 படிகளைக் கடந்து மலை மீதுள்ள கோவிலை அடைந்ததும் அங்குள்ள குழாயில் கை, கால்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். மலைக்குன்றில் உட்புறம் சிறிய குகை போன்ற அமைப்பில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சதுர் புஜங்களுடன் இருப்பதை காணலாம். அதில் இரண்டு கைகளை திருவடி முட்டில் வைத்த வண்ணம் யோகபட்டத்தை கட்டிக் கொண்டு ‘யோக நரசிம்மனாய்’, ‘சாந்த சொரூபியாய்’ லட்சுமி நரசிம்மன் நமக்கு தரிசனம் அளிக்கிறார்.

    அவரது தரிசனம் நமக்குப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகும். அதனால்தான் ஸ்ரீயோக நரசிம்மரை ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் தம் தீந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பாடி, மனம் உருகி மங்களா சாசனம் செய்துள்ளனர். மூலவருக்கு மலைமேல் ஒவ்வொரு சுவாமி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமையன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.



    108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை. இங்கு தாயாருக்கு ‘அமிர்தவல்லி’ என்று பெயர். வலது திருக்கரத்தால் அமிர்தம் போன்ற அனுகிரகத்தை அளித்துக் கொண்டு நான்கு புஜங்களுடன், இரண்டு திருவடிகளையும் மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளாள். அப்போதுதான் மலர்ந்த செந்தாமரை போன்ற மந்தகாச முகச்சிரிப்புடன் தாயாரின் தரிசனம் இருக்கிறது.

    பெரிய மலையில் தரிசனம் செய்து முடித்த பிறகு கீழ்இறங்கி 2 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கும் சின்ன மலைக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் ‘கொண்டபாளையம்‘ என அழைக்கப்படுகிறது. ஸ்ரீஆஞ்சநேயரை தியானம் செய்து கொண்டே சிறிய மலையில் உள்ள 405 படிகள் ஏறிக் கோவிலை அடைலாம். என்ன ஆச்சரியம். தெய்வீகமான சூழ்நிலையில் அமைதியான கோவிலாக ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தெப்ப உற்சவம் நடக்கும் வற்றாத ‘சக்கரைக்குளம்’ என்றும் அனுமத்புஷ்கரணி என்றும் அழைக்கப்படும் திருக்குளத்தில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு மேற்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

    மற்ற இடங்களில் நாம் தரிசிக்கும் ஆஞ்சநேயர் போலில்லாமல் ‘சிறிய திருவடி’ என அழைக்கப்படுபவர் தனது இரு திருவடிகளையும் மடக்கி யோக பட்டத்தில் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு, அந்த இரு கைகளும் நம்மைக் கை காட்டி ‘வாருங்கள்’ என்று அழைக்கும் திருக்கோலத்தில் அமர்ந்துள்ளார். இங்கு ஆஞ்சநேயருக்கும் எம்பெருமானுக்கே உரித்தான சதுர்புஜம் (நான்கு கைகள்) உள்ளன. இரு கைகளில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்குமாக அருள் பாலிக்கிறார்.

    அந்த சங்கும், சக்கரமும் பக்தர்களை பாதுகாப்பதற்காக ஸ்ரீயோக நரசிம்மரால் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டதாம். அதனாலேயே இங்கு அனுமனை ‘திருவடி’ என அழைப்பதில்லை. மகாவிஷ்ணு சொரூபமாகவே நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சங்கு, சக்ர ரூபியாக ஸ்ரீயோக ஆஞ்சநேயன் தரிசனம் நமது தேசத்தில் எங்குமே இல்லை.

    ஸ்ரீஅனுமனை வழிபட்ட பிறகு வெளியே வந்து புஷ்கரணிக் கரையில் தரிசனம் தரும் ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசங்கநாதரையும் வணங்க வேண்டும். எல்லா கோவில்களிலேயும் ஸ்ரீராமனை உத்தேசித்து அனுமன் சன்னதி இருக்கும். இங்கு ஸ்ரீயோக ஆஞ்சநேயரை உத்தேசித்து ஸ்ரீராமபிரான் வந்து தரிசனம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆஞ்சநேயருக்குத் தனியாகவே பிரசாதங்கள், நிவேதனம் செய்யப்படுகிறது.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும். இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு- முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர். விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன் கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.
    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும். பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.'
    நரசிம்மர் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.
    தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் நரசிம்மர். இரணியனைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்டு தூணிலிருந்து வெளியே வந்தவர். இரணியனைக் கொல்வதற்காகவே அவதரித்ததால் கோபமே உருவான இந்த மூர்த்தி, பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார்.

    உக்ர நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று பல மூர்த்தங்களில் இவருடைய தோற்றங்கள் உள்ளன. என்றாலும் பக்தர்கள் வணங்கிப் பரவசப்படுவது சாந்த சொரூபமாய் விளங்கும் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆகியோரைத்தான்.

    மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல் நரசிம்மர் நினைத்தவுடன் பலனைக் கொடுக்கக் கூடியவர். பக்திக்கு வசப்பட்டு பிரத்தியட்சமாய் வரக்கூடியவர். தான் வணங்கும் ஆதிசங்கரரை அழைத்துச் சென்ற கபாலீசனை, அவருடைய சிஷ்யன் மீது ஆரோகணித்து அடித்துக்கொன்றதைப் போல் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

    கண்கண்ட தெய்வமாக விளங்கும் நரசிம்மர் சோளிங்கரில் யோக நரசிம்மராகவே எழுந்தருளி இருக்கிறார். சப்த ரிஷிகள் நரசிம்மரை தரிசனம் செய்ய விரும்பி இம்மலையில் தவம் செய்ய ஒரு நாழிகை நேரத்திற்குள் தரிசனம் கிடைத்ததால் அகமகிழ்ந்து கடிகாசலம் என்று இத்தலத்திற்கு பெயர் சூட்டினார்கள்.
    ‘அக்காரக்கனி’ என்பது மூலவருக்கு தமிழ்ப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள், பைத்தியம், சித்தப்பிரமை கொண்டவர்கள், ஏவல், பில்லி சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் சிலநாள் தங்கி இருந்தால் சகல உபாதைகளும் நீங்கி, நன்மை பெறுவதாக நம்பிக்கை யோடு சொல்கிறார்கள்.

    குறை தீர்த்து வைக்கும் குன்றுப் பெருமாள்கள் இருவரையும் தரிசித்தால் மட்டுமே பலன் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதிகாலையில் அடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடிப் பெரிய மலை மீது ஏறி, நரசிம்மனை தரிசித்து விட்டு இறங்கி வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு சிறிய மலை ஏறி யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒரே நாளில் தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்.

    பெரியமலை சற்று செங்குத்தானது. நடக்க இயலாதவர்களையும் நோயாளி களையும் டோலிகள் மூலம் தூக்கிச் செல்ல வசதி இருக்கிறது. அடிவாரத்தில் குளக்கரையில் கருடாரூட வரதராஜரின் சந்நிதி இருக்கிறது. இந்தக் கோவிலில் மூலவர் இல்லை. உற்சவர் மட்டுமே இருக்கிறார். இக்கோவிலை உச்சிகால வேளையில் மட்டும்தான் திறக்கிறார்கள். ‘தொட்டாச் சாரியார்’ என்ற தன் பக்தருக்கு பகவான் காஞ்சி வரதராஜப் பெருமாளாகக் கருடசேவை தந்தருளியதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

    இந்த உற்சவ மூர்த்திக்குப் பக்தவத்சலர் என்றுபெயர். இவருடைய சந்நிதிக்குப் பின்புறம் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. அதில் ஆண்டாள், ஆழ்வார்கள், எறும்பியப்பா, தொட்டாச்சார்யார் முதலியவர் களுக்குத் தனி சந்நிதிகளும் உள்ளன.

    108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

    2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

    3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

    4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.

    5. உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

    6. பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

    7. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

    8. ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.

    9.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும்.

    10. வேலூர்-திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    11.காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்.

    12. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி.

    13. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது.

    14. சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

    15. ஸ்ரீநரசிம்மர் ‘உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லட்சுமியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் சோளிங்கர் யோக நரசிம்மரை ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்றும் பூசனைச் செய்கிறார்கள்.

    16. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

    17. ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

    18. மலைக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்சலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

    19. ஒப்பற்ற திவ்யதேசமான சோளிங்கர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    20. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.

    21. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

    22. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.

    23. புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    24. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


    25. இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

    26. கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

    27. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

    28. சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம்.

    29. சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

    30. தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.

    31. பெருமாளுக்கு ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோவில்களில் மொட்டை போடுவது. சில கோவில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    32.பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.

    33. இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

    34. திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

    35. வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானது கடிகாசலம்.

    36. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் காணப்படும் இத்திவ்விய தேசம் பற்றிய வரலாறுகள் யாவும் இனிய எளிய தமிழ் நடையில் கூறப்பட்டுள்ளன.

    37. வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம்.

    38. தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

    39. மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கடிகேசனை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    40. பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் எத்தொல்லையும் ஏற்படாது. அதில் நீராடும் புண்ணியவான்களைக் கண்டு அஞ்சி அவை விலகியே நிற்கும்.

    41.சோளிங்கர் தலத்தில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜை கள் நடத்தப்படுகிறது.

    42. இத்தலத்தில் நரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    43.கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.

    44. சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாரம்பரியமாக பூஜை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சோளிங்கர் தலத்து தலைமை அர்ச்சகராக ஸ்ரீதர் பட்டாச்சார்யா பூஜை செய்து வருகிறார்.

    45. சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

    46 கோவிலின் விமானம் சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் ஆகும்.

    47. கோயில்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

    48. பெரிய மலையில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு வெள்ளிதோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனமும், கார்த்திகை மாதத்தில் உற்சவமும் நடைபெறுகின்றது.

    49. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

    50. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் சோளிங்கர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக சென்றால் எளிதான பயணமாக இருக்கும்.
    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது.
    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது. நரசிம்மருக்கு தீபாரதணை காட்டி தீர்த்தம் தந்த பிறகு அர்ச்சகர் பக்தர்களின் முகத்தில் சிறப்பு தீர்த்தம் ஒன்றை தெளிப்பார். நரசிம்மரின் காலடியில் பெரிய தாம்பள தட்டுகளில் உள்ள பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தையே பக்தர்கள் முகத்தில் தெளித்து சிறப்பு செய்கிறார்கள். 2 அல்லது 3 தடவை முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

    நரசிம்மரின் பரிபூரண அருள் பெற்றுள்ள அந்த தீர்த்தத்தை கையாலோ அல்லது துணியோலோ துடைக்ககூடாது. புதிதாக சோளிங்கர் ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு இந்த குறிப்பை அர்ச்சகர்கள் சொல்லி விடுகிறார்கள். எனவே அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை யாரும் துடைப்பதில்லை.

    புனிதமான இந்த தீர்த்தம் முகத்தில் பட்ட மறு வினாடியே பக்தர்கள் முகம்‘பளிச்’ சென புத்துணர்ச்சி பெற்று விடுகிறது. கண்திருஷ்டி, பீடை, பில்லி, சூனியம் எது இருந்தாலும் தீர்த்தம் பெற்ற மனுவினாடியே அவையெல்லாம் பஞ்சாக பறந்தோடி ஓடி விடுகின்றன.

    1350 படிக்கட்டுகள் ஏறி வந்த களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. எனவே பெரிய மலைக்கு சென்று ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை வழிபட்டதும் அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை பெறத் தவறாதீர்கள்.
    கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

    லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

    லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமது வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயத்தை உணர்த்துவதாகவும், கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன. அதுபோல இறை வடிவங்களிலும் நமது வாழ்க்கைக்கு தேவையான சூட்சமங்கள் நிறைந்துள்ளன.

    உதாரணத்துக்கு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வடிவ அமைப்பை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தத்துவங்கள் மறைந்து இருப்பதை உணரமுடியும். முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மற்றும் பொருட்கள் ஒவ்வொரு தத்துவத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

    அதுபோலத்தான் லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. பொதுவாக கடவுள் உருவங்கள் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயங்களில் லட்சுமியும் நரசிம்மரும் ஒரே அம்சமாக ஒருங்கிணைந்து காணப்படுவார்கள்.

    அதாவது நரசிம்மர் மடிமீது லட்சுமி அமர்ந்திருப்பார். லட்சுமியை அன்போடு அணைத்தபடி நரசிம்மர் இருப்பார். நரசிம்மர் அவதாரம் எடுத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டார். அவரது கோபத்தை தணித்தது லட்சுமிதான். கோபம் தணிந்த பிறகே சாந்தமான நரசிம்மர் லட்சுமியை தனது மடிமீது அமர்த்தி மகிழ்ந்தார். அந்த வகையில் லட்சுமி வந்த பிறகே நரசிம்மர் தம் வாழ்வில் பரிபூரணம் பெற்றார்.

    எனவே இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது. ஆக்ரோஷமாக இருக்கும் நரசிம்மரையும் பாருங்கள், அவரை சாந்தப் படுத்திய பிறகு அவர் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மரையும் பாருங்கள்... லட்சுமி நரசிம்மரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

    கோபத்தில் இருப்பவரிடம் போய் ஏதாவது கேட்டால் கிடைக்காது. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பவரிடம் போய் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு. இந்த தத்துவத்தையும் லட்சுமி நரசிம்மரின் வடிவம் நமக்கு காட்டுகின்றது. அதுமட்டுமின்றி ஆணுக்கு பெண் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டையும் லட்சுமி நரசிம்மர் வடிவத்தில் காணமுடியும்.

    பொதுவாக வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பும் கணவனை மனைவி சாந்தப்படுத்தி உபசரிக்க வேண்டும். கணவன் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், மனைவி முகத்தைப் பார்த்ததும் சாந்தமாக மாற வேண்டும். அதுதான் உண்மையான தாம்பத்தியம். ஒவ்வொரு விஷயத்திலும் பெண்ணை முன்னிலைப்படுத்த வேண்டும். எந்த வீட்டில் பெண் சுதந்திரமாக முன்நிறுத்தப்படுகிறாளோ, அந்த வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பார்கள். 

    வீட்டில் இருக்கும் பெண்கள் கண்ணீர் விடக்கூடாது என்பது ஐதீகம் ஆகும். அதற்கேற்ப ஆண்கள் நடந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தனது சம்பாத்தியம் முழுவதையும் மனைவி கையில் கொடுத்துவிட்டே வாங்க வேண்டும். ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐந்து லட்சமாக இருந்தாலும் சரி மனைவி கையில் கொடுத்துவிட்டு பெற்றால் அந்த வீடு லட்சுமிகரமாக மாறும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    இதைத்தான் மறைமுகமாக லட்சுமி நரசிம்மர் கோலம் நமக்கு சொல்கிறது. இதை உணர்ந்துவிட்டால் போதும் கணவன் மனைவிக்கு இடையில் எந்த சிறு மனஸ்தாபமும் வராது. எனவே கணவனுக்கோ, மனைவிக்கோ சிறு வருத்தம் ஏற்பட்டாலும் லட்சுமி நரசிம்மர் இருக்கும் திசை நோக்கி, நரசிம்மா எனது குடும்பத்தை வாழையடி வாழையாக வாழவை என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும் லட்சுமி நரசிம்மர் ஓடோடி வந்து உதவி செய்வார். 
    அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. தனி கோவிலாக அமைந்துள்ள இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு, அதில் 9-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும். இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை நரசிம்மருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
     
    அன்று லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை, அலரிப்பூ, வெள்ளெருக்கு மாலைகள் சூட்டியும், சுண்டல், பொரி, பழம் வைத்து வழிபட்டால் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனம் குளிர அருள்பாலிக்கிறார் லட்சுமி நரசிம்மர்.

    குறிப்பாக சேவிப்போர் வேண்டும் வரம் அருளுகிறார். இதில் முக்கியமாக பணிகளில் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
     
    இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராய பல்லவ பேரசால் கட்டபட்ட இந்த கோயில் நரசிம்மர் சுயம்பாக அதாவது இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார்.

    பாலக பக்தன் பிரகலா தன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம அவதாரம் அந்நேரத்தில் அசுரனை அழித்துவிட்டு இந்த சிங்கிரி மலை காட்டுபகுதிக்கு உக்கிர நரசிம்மராக வந்தபோது சிவபெருமான் நாரத ரிஷியிடம் ஸ்ரீவிஷ்ணு உக்கர அவதாரமான நரசிம்மரை சாந்தபடுத்த என்ன செய்வதேன்று யேசித்த போது ஸ்ரீமகாலஷ்மியால் மட்டுமே சாந்தபடுத்த முடியும் என்று கூறிய நாரத ரிஷி உடனே மகாலட்சிமியிடம் முறையிடவே உடனே அதனை ஏற்று லஷ்மி தேவி சிங்கிரி மலை காட்டு பகுதிக்கு சென்று வனதேவதையாக உருமாறி நரசிம்மரை சாந்தபடுத்தியதால் இத்தலத்தில் நரசிம்மர் மற்றும் மகாலட்சுமி இருவருமே பக்தர்களுக்கு வரம்கொடுக்கவே நின்றபடியே காட்சியளிகிறார்கள்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. அவ்வேளையில் இங்கு வரும் பக்தர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

    இந்த சிங்கிரி லஷ்மி நரசிம்மரை அந்த நேரத்தில் வணங்க நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், திருமண தடை நீங்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும்,தீராத நோயும் தீரும், கடன்கள் தீரும்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்தால் பூரண குணம் கிடைக்கும், மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.

    இந்த திருத்தலத்தில் நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
    ×