search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yoga narasimha"

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் ஸ்ரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி 
    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் ஆகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து நாள்தோறும் அன்னவாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், அனுமந்தவாகனம், யானைவாகனம், கருடவாகனம், ரிஷபவாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    நேற்று லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் அமர்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு இருந்து தேரோட்டம் தொடங்கி முதலில் விநாயகர் தேரும் 2-வது தேரில் சோமேஸ்வரரும், சவுந்தரவல்லி அம்பாளும், 3-வது பெரிய தேரில் லட்சுமி நரசிம்மசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. தேர் புறப்பட்டு தாரமங்கலம் பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

    இன்று (சனிக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ்நிலையம் வரையும், நாளை (ஞாயிற்றுக்் கிழமை) பஸ்நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு தெரு பிரிவு வரையும், 26- ந்தேதி (செவ்வாய்க்்் கிழமை) தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேருகிறது. இவ்வாறு 5 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி (புதன் கிழமை) இரவு 9 மணிக்கு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும்.
    சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம்.

    இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும். இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு- முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும்.

    பொங்கல் கழிந்த மறுநாள் கனுப்பரிவேட்டை உற்சவம் நடைபெறும். இதனை மேற்குத்திக்குப் பரிவேட்டை என்றும் கூறுவர். விடியற் காலையில் பெருமாள் தனித்துத்தலைப்பாகை, குற்றுவாள், கேடய அலங்காரத்துடன் கிளிக்கூண்டில் புறப்பாடு காண்பார் கண்டருளி மேற்குத்திசைக் கிராமங்களுக்குச் செல்வார்.
    திரும்பும் போது எறும்பி எனும் அசுவரேந்தபுரம் கிராம மண்டபத்தில் திருவாராதளம், திருப்பாவை நடைபெறும். பின்னர் திருப்பாவை சாற்று தீர்த்த விநியோகம் நிகழும்.'
    நரசிம்மர் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.
    தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் நரசிம்மர். இரணியனைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்டு தூணிலிருந்து வெளியே வந்தவர். இரணியனைக் கொல்வதற்காகவே அவதரித்ததால் கோபமே உருவான இந்த மூர்த்தி, பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார்.

    உக்ர நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று பல மூர்த்தங்களில் இவருடைய தோற்றங்கள் உள்ளன. என்றாலும் பக்தர்கள் வணங்கிப் பரவசப்படுவது சாந்த சொரூபமாய் விளங்கும் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆகியோரைத்தான்.

    மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல் நரசிம்மர் நினைத்தவுடன் பலனைக் கொடுக்கக் கூடியவர். பக்திக்கு வசப்பட்டு பிரத்தியட்சமாய் வரக்கூடியவர். தான் வணங்கும் ஆதிசங்கரரை அழைத்துச் சென்ற கபாலீசனை, அவருடைய சிஷ்யன் மீது ஆரோகணித்து அடித்துக்கொன்றதைப் போல் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

    கண்கண்ட தெய்வமாக விளங்கும் நரசிம்மர் சோளிங்கரில் யோக நரசிம்மராகவே எழுந்தருளி இருக்கிறார். சப்த ரிஷிகள் நரசிம்மரை தரிசனம் செய்ய விரும்பி இம்மலையில் தவம் செய்ய ஒரு நாழிகை நேரத்திற்குள் தரிசனம் கிடைத்ததால் அகமகிழ்ந்து கடிகாசலம் என்று இத்தலத்திற்கு பெயர் சூட்டினார்கள்.
    ‘அக்காரக்கனி’ என்பது மூலவருக்கு தமிழ்ப் பெயர். பேய் பிசாசு பிடித்தவர்கள், பைத்தியம், சித்தப்பிரமை கொண்டவர்கள், ஏவல், பில்லி சூனியம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் சிலநாள் தங்கி இருந்தால் சகல உபாதைகளும் நீங்கி, நன்மை பெறுவதாக நம்பிக்கை யோடு சொல்கிறார்கள்.

    குறை தீர்த்து வைக்கும் குன்றுப் பெருமாள்கள் இருவரையும் தரிசித்தால் மட்டுமே பலன் உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதிகாலையில் அடிவாரத்தில் உள்ள தக்கான் குளத்தில் நீராடிப் பெரிய மலை மீது ஏறி, நரசிம்மனை தரிசித்து விட்டு இறங்கி வந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டு சிறிய மலை ஏறி யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒரே நாளில் தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிடலாம்.

    பெரியமலை சற்று செங்குத்தானது. நடக்க இயலாதவர்களையும் நோயாளி களையும் டோலிகள் மூலம் தூக்கிச் செல்ல வசதி இருக்கிறது. அடிவாரத்தில் குளக்கரையில் கருடாரூட வரதராஜரின் சந்நிதி இருக்கிறது. இந்தக் கோவிலில் மூலவர் இல்லை. உற்சவர் மட்டுமே இருக்கிறார். இக்கோவிலை உச்சிகால வேளையில் மட்டும்தான் திறக்கிறார்கள். ‘தொட்டாச் சாரியார்’ என்ற தன் பக்தருக்கு பகவான் காஞ்சி வரதராஜப் பெருமாளாகக் கருடசேவை தந்தருளியதாக ஸ்தலபுராணம் கூறுகிறது.

    இந்த உற்சவ மூர்த்திக்குப் பக்தவத்சலர் என்றுபெயர். இவருடைய சந்நிதிக்குப் பின்புறம் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. அதில் ஆண்டாள், ஆழ்வார்கள், எறும்பியப்பா, தொட்டாச்சார்யார் முதலியவர் களுக்குத் தனி சந்நிதிகளும் உள்ளன.

    108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. சோளிங்கர் நரசிம்மர் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது.

    2. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.

    3. இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

    4. பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் காட்சி அளிக்கிறார்.

    5. உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

    6. பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

    7. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது யோக லட்சுமி நரசிம்மரும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

    8. ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.

    9.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது தெரியும்.

    10. வேலூர்-திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    11.காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்.

    12. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி.

    13. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது.

    14. சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர் என்று அறியப்படுகிறது. ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

    15. ஸ்ரீநரசிம்மர் ‘உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லட்சுமியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் சோளிங்கர் யோக நரசிம்மரை ‘ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’ என்றும் பூசனைச் செய்கிறார்கள்.

    16. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

    17. ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

    18. மலைக்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்சலம் கோவிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

    19. ஒப்பற்ற திவ்யதேசமான சோளிங்கர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    20. சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.

    21. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

    22. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்.

    23. புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    24. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


    25. இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

    26. கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

    27. வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.

    28. சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம்.

    29. சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

    30. தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.

    31. பெருமாளுக்கு ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை உள்ளது. சில கோவில்களில் மொட்டை போடுவது. சில கோவில்களில் உண்டியலில் காணிக்கை போடுவது. ஆனால் இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    32.பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது.

    33. இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.

    34. திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

    35. வைகுந்தம், திருப்பாற்கடல், திருவேங்கடத்திற்கு நிகரானது கடிகாசலம்.

    36. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் காணப்படும் இத்திவ்விய தேசம் பற்றிய வரலாறுகள் யாவும் இனிய எளிய தமிழ் நடையில் கூறப்பட்டுள்ளன.

    37. வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம்.

    38. தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

    39. மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கடிகேசனை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    40. பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் எத்தொல்லையும் ஏற்படாது. அதில் நீராடும் புண்ணியவான்களைக் கண்டு அஞ்சி அவை விலகியே நிற்கும்.

    41.சோளிங்கர் தலத்தில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜை கள் நடத்தப்படுகிறது.

    42. இத்தலத்தில் நரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஸ்ரீயோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    43.கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வேலூர், அரக்கோணம், திருத்தணி, சித்தூர்,திருப்பதி, சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடுகிறார்கள். தனியார் போக்குவரத்து நிறுவனங் களும் சோளிங்கருக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறிப்பிடத் தக்கது.

    44. சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மருக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாரம்பரியமாக பூஜை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சோளிங்கர் தலத்து தலைமை அர்ச்சகராக ஸ்ரீதர் பட்டாச்சார்யா பூஜை செய்து வருகிறார்.

    45. சோளிங்கர் தலத்தில் ஒரு நாழிகைக்கு வழிபாடு செய்தாலே போதும், 48 நாட்களுக்கு விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

    46 கோவிலின் விமானம் சிம்ஹகோஷ்டாக்ருதி விமானம் ஆகும்.

    47. கோயில்கள் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

    48. பெரிய மலையில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு வெள்ளிதோறும் பஞ்சாமிர்தத் திருமஞ்சனமும், கார்த்திகை மாதத்தில் உற்சவமும் நடைபெறுகின்றது.

    49. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

    50. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் சோளிங்கர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், திருவாலங்காடு, அரக்கோணம் வழியாக சென்றால் எளிதான பயணமாக இருக்கும்.
    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது.
    சோளிங்கர் பெரியமலையில் மூலவர் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை சிறப்புக் கட்டணம் செலுத்தி வழிபடுபவர்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒரு பாக்கியம் கிடைக்கிறது. நரசிம்மருக்கு தீபாரதணை காட்டி தீர்த்தம் தந்த பிறகு அர்ச்சகர் பக்தர்களின் முகத்தில் சிறப்பு தீர்த்தம் ஒன்றை தெளிப்பார். நரசிம்மரின் காலடியில் பெரிய தாம்பள தட்டுகளில் உள்ள பெரிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தையே பக்தர்கள் முகத்தில் தெளித்து சிறப்பு செய்கிறார்கள். 2 அல்லது 3 தடவை முகத்தில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது.

    நரசிம்மரின் பரிபூரண அருள் பெற்றுள்ள அந்த தீர்த்தத்தை கையாலோ அல்லது துணியோலோ துடைக்ககூடாது. புதிதாக சோளிங்கர் ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு இந்த குறிப்பை அர்ச்சகர்கள் சொல்லி விடுகிறார்கள். எனவே அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை யாரும் துடைப்பதில்லை.

    புனிதமான இந்த தீர்த்தம் முகத்தில் பட்ட மறு வினாடியே பக்தர்கள் முகம்‘பளிச்’ சென புத்துணர்ச்சி பெற்று விடுகிறது. கண்திருஷ்டி, பீடை, பில்லி, சூனியம் எது இருந்தாலும் தீர்த்தம் பெற்ற மனுவினாடியே அவையெல்லாம் பஞ்சாக பறந்தோடி ஓடி விடுகின்றன.

    1350 படிக்கட்டுகள் ஏறி வந்த களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது. எனவே பெரிய மலைக்கு சென்று ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரை வழிபட்டதும் அர்ச்சகர் தெளிக்கும் தீர்த்தத்தை பெறத் தவறாதீர்கள்.
    சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும்.
    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும்.

    சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் நமக்குக் காட்சி அளித்து, அருளை வாரி வழங்குகிறார்கள்.

    பெரிய மலையில் கார்த்திகை மாதத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை உள்ள நாட்கள் மிகவும் பிரசித்தம். இந்த மாதத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் யோகத்தை கலைத்து, கண் திறந்து பார்ப்பதால் கார்த்திகை சோளிங்கர் பயணமும் நரசிம்மர் தரிசனமும் மிகவும் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் குளித்து விட்டு 1305 படி ஏறி நரசிம்ம சாமியை தினம் 108 முறை பிரதட்சணம் செய்தால் ஸ்ரீயோக நரசிம்மனே அவர்கள் கனவில் வந்து குறை தீர்ப்பதாகத் தல புராணம் கூறுகிறது.

    108 பிரதட்சணம் செய்பவர்கள் வசதிக்காக கோவிலின் மூன்றாவது பிரகாரம் மட்டும் அதிகாலையே திறப்பது வழக்கம். எந்த நிலையிலும், எவருக்குமே இரவில் மலை மேல் தங்க அனுமதி இல்லை.

    துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் இந்த ஸ்தல பெருமாளை வழிபட்டால் விலகும். நோய்கள் மூலம் அவஸ்தைப்படுகிறவர்கள் தினமும் அடிவாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மலை மீது ஏறி பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்பது மிகுந்த நம்பிக்கை.
    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.
    சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பெரிய மலைக்கு ஏறிச் செல்லும் போது படிக்கட்டு ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் தொட்டில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சில பெண்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் சேலை முந்தானையில் கொஞ்சம் கிழித்து, அதையே தொட்டில் போல் கட்டி தொங்க விட்டு நரசிம்மரை வழிபடுகிறார்கள்.

    இந்த வழிபாடு காரணமாக உடனே புத்திரபாக்கியம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது புது வீடு வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மலையில் கற்களை அடுக்கி வைக்கிறார்கள். இந்த நம்பிக்கை மூலம் வீடு வாங்கும் யோகம் உருவாகிறது.
    ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது இந்த கார்த்திகை மாதம் முழுவதும் அல்லது நரசிம்மருக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
    ஓம் திருக்கடிகைத்தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் அழியங்கையா போற்றி
    ஓம் அக்காரத் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி
     அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தெந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி
    ஓம் உலகமுண்டாய் போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக் கண்ணா போற்றி
    ஓம் காமனைக் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளிமணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமரா போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங்கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி
    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவர முனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப்பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகலே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம்  மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப்பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குருபரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னை யாளுடையாய் போற்றி
    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்டதிருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர்  தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
    ஓம் வில்லிறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக் கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி
    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் சிரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன் வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி
    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த  விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வர மருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி
    ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார்.
    இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோளிங்கர் காட்டுக்குள் நுழைந்தார். அவர்துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத் தொடங்கியது.

    மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண் முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்து விட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அகிம்சையை பின்பற்றினார்.

    ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார். சோழ சோளிங்கரில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன் அகிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொண்டு வந்தார்.
    சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார்.
    சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம்.

    சோளிங்கர் மலையில் சப்தரிஷிகளும் தவம் செய்து ஸ்ரீ யோக நரசிம்மரின் காட்சியைப் பெற்றனர். அப்படி சப்தரிஷிகள் அருள் பெற்றது போல பக்தர்களும் அருள்பெறவே கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்த்து அருள்கிறார் என்று சொல்கிறார்கள்.

    அது எப்படி சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்த்திகை மாதம் மட்டும் எல்லா ஊர்களிலும் நரசிம்மருக்கு தைலக்காப்பு செய்து வைப்பார்கள். ஆனால் சோளிங்கர் தலத்தில் மட்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதில்லை. இதன்மூலம் இத்தலத்தில் நரசிம்மர் கண்திறந்து இருக்கிறார்.

    இது எந்த தலத்துக்கும் கிடைக்காத பெரும் பேறு. எனவே கார்த்திகை மாதம் ஏதாவது ஒருநாள் சோளிங்கர் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் அவரது நேரடி பார்வையை பெற்ற புண்ணியத்தை அனுபவிக்கலாம். 12 மாதங்களில் ஒரே ஒரு மாதம் மட்டும் நரசிம்மர் இப்படி அருள்கிறார். எனவே பக்தர்கள் இந்த கார்த்திகை மாதத்தில் திட்டமிட்டு தங்களது புனித யாத்திரையை அமைத்துக் கொண்டால் சிறப்பான அனுபவத்தை பெறலாம்.

    இவ்வாறு சோளிங்கர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    கார்த்திகை மாதம் நரசிம்மர் கண்திறந்து பார்ப்பதால் அவரை தரிசனம் செய்ய வைணவர்கள் மட்டுமின்றி அனைத்து பிரிவினரும் கோவில்களுக்கு வரத்தயங்குவது இல்லை. இதனால் கார்த்திகை மாதம் முழுவதும் சோளிங்கர் தலத்தில் பக்தர்கள் வெள்ளமென படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக கார்த்திகை மாதம் 5 வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சோளிங்கருக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது. நரசிம்மர் கண்திறந்து இருப்பதை நம் கண் குளிரப் பார்த்து தரிசித்துவிட வேண்டும் என்று பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

    பெரியமலை கோவிலில் ஒரே நேரத்தில் சில நூறுபேர் தான் இருக்க முடியும். இதனால் பக்தர்களின் வரிசை நாம் நடந்து செல்லும் மலை படிக்கட்டு வரை வந்து விடுகிறது.

    பெரிய மலைக்கு செல்ல மொத்தம் 1305 படிக்கட்டுகள் உள்ளன. இதில் 650-வது படிக்கட்டுகளிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கிவிடுமாம். அதாவது பாதி மலையிலேயே பக்தர்கள் வரிசை தொடங்கி விடுகிறது. எனவே கார்த்திகை மாதம் உங்கள் வசதிக்கு ஏற்ற நாளில் திட்டமிட்டு சோளிங்கர் சென்று வந்தால் நரசிம்மர் கண்திறந்து அருள்வதை கண்குளிர தரிசித்து வரலாம்.
    ×