search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysteries"

    • நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.
    • மர்மநபர்கள் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது 70).

    வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் பிழைப்புகாக தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இவரிடம் 10 ஆடுகள் இருந்தன.

    பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அமுதா மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு சென்ற போது அங்கு கழுத்து முறிந்து ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் 10 ஆடுகளும் இறந்து கிடந்தன.

    இதைக்கண்டு அமுதா கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆடுகள் எப்படி இறந்தது? ஆடுகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதால் இது எப்படி நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர்.

    மேலும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    10 ஆடுகளையும் மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஆடுகள் சாவுக்கு காரணம் என்ன? முன்விரோத செயலா? என என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை திருடப்பட்டுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ஒ.எம். ராஜீவ் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61 ).

    ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், முன்பக்கம் நிறுத்திருந்த ஸ்கூட்டியை காணாதது கண்டும் அதிர்ச்சிடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீலகிரி பஞ்சாயத்து செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 38).

    இவர் தஞ்சை ரகுமான் நகரில் பித்தளை ,இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த பத்மநாதன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
    • உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40).

    இவர் மனைவி சாந்தி (38), குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று காலை மனோகரன், மனைவி சாந்தியுடன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    பின்னர், மனோகரன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தகவலறிந்த வலங்கமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு பிரிவு போலீஸ் அறிவழகன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பரிதா (வயது 36). குழந்தைகளை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் சென்றார்.
    • மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசரீப். இவரது மனைவி பரிதா (வயது 36). இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீதியில், இவர்களது குழந்தைகள் டியுஷன் படித்து வருகின்றனர்.இவர்களை அழைத்து வருவதாற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் பரிதா சென்றார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வாட்டர் டேங்க் அருகே நடந்து வந்து ெகாண்டிருந்தார். அந்த இடம் இருள் சூழ்ந்த பகுதியாகும். அப்போது பரிதாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென பரிதாவின் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த பரிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். மர்மநபர்களால் பறித்து செல்லப்பட்ட ஹேன்ட்பேக்கில் ரூ.5 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, ரேஷன் கார்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரிதா அளித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா?
    • 2 பேரின் உடல்களையும் பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.

    இதேபோல் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த துறையூர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு (வயது44), ஸ்டாலின் (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே ஒரத்தநாடு அருகே தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில் ரத்தக்கறை உடைந்த மதுபாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதை தகவல் அறிந்து ஒரத்தநாடு போலீசார் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.அதில், தென்னமநாட்டில் கொலை செய்து விட்டு 2 பேரின் உடல்களையும் திருச்சி மாவட்ட பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரிய வந்தது.

    அவர்களை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணம் என்ன ? எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர்.
    • அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்..

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர். இவர்கள் தங்கள் குடும்ப செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைத்தனர். இந்நிலையில் அடமானம் வைத்த நகையை மீட்க ரூ.3 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சில்லரை பணத்தை எடுத்து வீசினர். இதனை எடுத்து அவர்களிடம் ஓப்படைக்க அறிவுக்கண்ணன், லதா தம்பதியர் முயற்சித்தனர்.

    அப்போது அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அறிவுக்கண்ணன், லதா தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது


    கடலூர்

    புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது மர்ம நபர்கள் நேற்று இரவு, கொடிக்கம்பத்திலிருந்து பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அருகில் திரண்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் இருந்த பா.ம.க. கொடியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் புவனகிரி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதே இடத்தில் பா.ம.க. கொடி அறுத்து எரியப்பட்டது. இது தொடர்பான வழக்கும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பா.ம.க.வினரிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல புவனகிரி சித்தேரியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடி அறுத்து எரிந்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் நற்பணி மன்ற பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. கொடியை எரித்த அதே மர்ம நபர்கள் இந்த செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
    • அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள எலக்ட்ரிக்கல் பெயிண்ட் கடை, உணவகம், செருப்பு கடை, டீக்கடை உள்ளிட்ட 8 கடைகளில் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு சம்பவம் சம்பந்தமாக சி.சி.டி.வி. காட்சி ஏதேனும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த வீடியோவை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    • திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமத்தில் இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார்.இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு வெளியில் புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கோவிலில் தினமும் ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்து வந்தன.   பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி சதாசிவம், நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களிடம் இத்தகவலை கூறினார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டி யலை பார்வையிட்டனர். கும்பாபி ஷேகம் நடந்ததில் இருந்தே இக்ேகாவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதில் சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் ஊருக்கு ஓதுக்குபுறமாக இருந்ததால் இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சந்தேகம் அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து இது குறித்து ஊர் முக்கியஸ்தர் சுபாஷ் (வயது 65) திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.
    • அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூருக்குள் நுழையும் இடத்தில் பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.

    அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பூச்செடிகளை வைத்து பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்களால் இந்த முக்கோண பூங்கா உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த ஒரு பகுதி இரும்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பூங்காவின் சுவற்றை இடித்து, அதில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    சுவற்றை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த சுவற்றை பரமத்திவேலூர் அரிமா சங்க நிர்வாகிகள் கட்டித்தர முன் வரவேண்டும் என்றனர்.

    இது குறித்து வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் சேதப்படுத்தப்பட்ட முக்கோண பூங்கா பற்றிய தகவல் கிடைத்தவுடன் பார்த்து வந்தோம். இரும்பு கம்பியை திருடிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். தங்கள் .3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.
    • காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது‌.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது . தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆறு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×