search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robberies"

    • திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமத்தில் இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
    • நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார்.இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு வெளியில் புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கோவிலில் தினமும் ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்து வந்தன.   பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி சதாசிவம், நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களிடம் இத்தகவலை கூறினார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டி யலை பார்வையிட்டனர். கும்பாபி ஷேகம் நடந்ததில் இருந்தே இக்ேகாவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதில் சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் ஊருக்கு ஓதுக்குபுறமாக இருந்ததால் இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சந்தேகம் அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து இது குறித்து ஊர் முக்கியஸ்தர் சுபாஷ் (வயது 65) திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி கொள்ளையர்கள் ஒரு வீட்டில் புகுந்து 2 பெண்களை கொலை செய்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரு சிறுவனையும் கத்தியால் குத்தினர். அவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த கொள்ளை நடந்து ஒரு மாதம் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தேவகோட்டை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேவ கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் பூங்கா அருகில் உண்ணா விரதம் இருந்தனர்.

    அப்போது போலீசார் ஒரு மாதத்திற்குள் உண்மை யான குற்ற வாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. துரை தேவகோட்டையில் முகாமிட்டு இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்போது இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்று குற்றவாளிகளை தேடி வருகிறார். இன்ஸ் பெக்டர் சரவணன், பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தங்களது பகுதிகளில் அதிக அளவு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மீண்டும் கொள்ளை

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திருப்பத்தூர் சாலையில் ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் சென்டர் என அடுத்தடுத்து 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    விரைவில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.
    • கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியங் கொண்டான் நகரை சேர்ந்தவர் ஜான். இவர் திண்டிவனம் காந்திசிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இதேபோல அந்த பகுதியில் ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தின் பூட்டுகளை உடைத்தனர். இதேபோல செல்போன் சர்வீஸ் மையம், அருகில் உள்ள பேன்சிஸ்டோர் ஆகி யவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.

    அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை ஜான் உள்பட 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. ேபாலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என தேடிப் பார்த்தனர்.
    • பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.

    திட்டக்குடி, அக்.28-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி (45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள், பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா என தேடிப் பார்த்தனர். நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கு பிரிட்ஜ்யில் வைத்திருந்த கறி குழம்பு, சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டுகளை பின்புறம் உள்ள வயலில் எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மனைவி விஜயலட்சுமி (27), கை குழந்தையுடன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்றார். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே விரைந்து வந்த விஜயலட்சுமி வீடடின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அரை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் வீட்டிற்கு பின்புறம் இருந்த மற்றொரு வீட்டிலும் பீரோவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருதத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பாகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • செட்டித்தெருவில் உள்ள வீட்டில் தனது மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.
    • பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் செட்டித்தெருவை சேர்ந்தவர் டோமினிக். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 27).டோமினிக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜாஸ்மின் செட்டித்தெருவில் உள்ள வீட்டில் தனது 2 வயது மகன் மற்றும் மாமியார் ரோசரியுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாமியார் ரோசரி வெளியூர் சென்றிருந்தார். ஜாஸ்மின் மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் யாரோ பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

    வீட்டுக்கு திரும்பிய ஜாஸ்மின் வீட்டில் பீரோ திறந்த நிலையில் இருந்தது கண்டு திடுக்கிட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் உள்ளதா என பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஜாஸ்மின் பாபநாசம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்இன்ஸ்பெ க்டர்கள் குமார், இளமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
    • பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

    சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.

    கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.
    • ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியை சேர்ந்தவர் பாரி (வயது 45).

    இவர் கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி வேலை முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் 4 காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரிலிருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.

    மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அந்த கடையில் பணம் இல்லாததால் திருடன் திரும்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக நபர் ஒருவர் உள்ளே சென்று பணத்தை தேடிய சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    எவ்வித முகமூடி அணியாமல் கையில் சுத்தியுடன் துணிச்சலாக தனிநபர் ஒருவர், பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து பூட்டு உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து அந்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • கடலூரில் 4 கோவில்களில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைத்து திருட முயற்சி செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 15 -ந் தேதி மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு ஸ்ரீ நாகம்மாள் கோவில், புதுப்பாளையம் கங்கையம்மன் கோவில், சப் ஜெயில் ரோடு வினைதீர்த்த விநாயகர் கோவிலில் உண்டியல் உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் கடலூர் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில், கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் , ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கும்தாமேடு தரைப்பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் கடலூரில் 4 கோவில்களில் உண்டியல் உடைத்து திருடியது தெரிய வந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் சேர்ந்தவர் சக்தி (வயது 19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் . இந்த நிலையில் சக்தி என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் மற்றும் ரவிச்சந்திரனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டினார்.

    ×